அழகர் ஆற்றில் இறங்கும் நாள் 2025 வைகை இறங்குதல் திருவிழா ( alagar vaigai festival 2025 date ) - சித்திரை மாத பிறப்பை சித்திரை திருவிழாவாக நாம் கொண்டாடுகிறோம். இந்த திருவிழாவினை மதுரையில் சிறப்பாக செய்வார்கள். அதில் சொக்கநாதர் கல்யாணம் ஒன்று மற்றொன்று அழகர் ஆற்றில் இறங்குவது ஆகும். இதில் அழகர் கோவில் அலகு மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அதாவது மதுரையிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவிலின் பெயர் திருமால் ஆகும். இந்த கோவிலினை பாதுகாக்க பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி உள்ளார். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை திருத்தலம் இங்கு இருக்கிறது.
வருடா வருடம் சித்திரை மாதத்தில் சொக்கநாதர் கல்யாணத்திற்கு பிறகு அழகர் ஆற்றில் இறங்குவார். இதனை கண்டுகளிக்க லட்ச மக்கள் அங்கு இருப்பார்கள். அழகர் அவர்கள் மதுரைக்கு புறப்பாடு செய்தல், தல்லாக்குளம் எதிர்சேவை, வைகை எழுந்தருளல் போன்றவைகள் ஒவ்வொரு நாளன்று திருவிழாப்போல் நடக்கும்.
சற்று முன்: காரடையான் நோன்பு 2023 நேரம்
வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நாள் 2025 நேரம்
மே 03 ஆம் தேதியன்று திருமாலிருஞ்சோலையில் இருந்து புறப்பாடு செய்து மே 04 ஆம் நாள் தல்லாகுளத்தில் எதிர்சேவை செய்து மே 05 நாளில் வைகை ஆற்றில் இறங்குவார்.
சற்று முன்: பிரம்ம முகூர்த்தம் எத்தனை மணிக்கு