காரடையான் நோன்பு 2025 நேரம்

காரடையான் நோன்பு 2025 நேரம் விரத முறை ( karadaiyan nombu 2025 in tamil timings ) - தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்களும் தினந்தோறும் கடவுளை பிரார்த்தனை செய்வார்கள். அதில் வருடத்தில் வருகின்ற குறிப்பிட்ட முக்கிய நாட்களில் விரதங்கள் மேற்கொண்டால் கூடுதல் நன்மையை அவர்களுக்கு தரும். அந்த வகையில் திருவாதிரை நோன்பும் இடம் பெற்று இருக்கும். இதற்கு வேறு பெயராக நிறைய உள்ளது. அவைகள் காமாட்சி விரதம், கௌரி விரதம் மற்றும் சாவித்திரி விரதம் எனவும் நாம் சொல்லலாம்.

காரடையான் நோன்பு 2025 நேரம்


மாசி மாத இறுதி வார கடைசி நாளும் பங்குனி மாத முதல் வார முதல் நாளும் சேர்கின்ற நாளினை தான் நாம் காரடையான் நோன்பு என்கிறோம். இந்த நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விரதங்கள் மேற்கொள்வதன் மூலம் பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும் அவர்களின் கணவர்கள் ஆயுள் அதிகரிக்கவும் பயன்படுகிறது. திருமணமாகாதவர்களும் இந்த விரதத்தினை மேற்கொள்ளலாம்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: பிரம்ம முகூர்த்தம் எத்தனை மணிக்கு

வழிபாடு

நமது வீட்டில் உள்ள அம்பிகையின் திருவுருவப்படத்திற்கு முன்னர் நான்கு வாழை இலையில் அடை, வெற்றிலை மற்றும் பாக்கு, வாழைப்பழம் போன்றவைகளை படைத்து வழிபாடு செய்யலாம்.

காரடையான் நோன்பு 2025 நேரம் தேதி

மார்ச் 15 அதாவது பங்குனி ஒன்று புதன்கிழமை காலை வேளை 06.29 முதல் 06.47 வரையும் உள்ளது.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: தாலி கயிறு மாற்ற ஏற்ற நாள்