-->
சொத்து பிரச்சனை

சொத்து பிரச்சனை

சொத்து பிரச்சனை, பூர்வீக சொத்து பிரச்சனை - பூர்விக சொத்தாக இருந்தாலும் சரி பரம்பரை சொத்தாக இருந்தாலும் சரி பிரச்சனைகள் வந்து போய் கொண்டே தான் இருக்கும். அது ஒரு ஒரு குடும்பத்தில் நடப்பது இயல்பான ஒன்று தான். ஒரே குடும்பத்தில் 2, 3 மகன்கள் அல்லது 2, 3 மகள்கள் இருக்குமாயின் பிரச்சனைகள் சாதரணமாக வரும். எல்லாருக்குமே சமமாக பிரித்தால் பிரச்சனை எதுமே வராது. ஒருவேளை தர வில்லை என்றால் அப்போதுதான் சண்டை என்பது உண்டாகும்.

சொத்து பிரச்சனை


பூர்வீக சொத்துக்கள்

பூர்வீகமாக அல்லது வம்சாவழியாக வந்த சொத்துக்கள் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை வாரிசுகள் எனப்படும் தந்தை, அவருடன் பிறந்த சகோதரர், சகோதரி மற்றும் இவர்களின் பிள்ளைகள் என இவ்வளவு பேருக்கு சொத்துக்கள் சொந்தமாகும். ஆனால் முதல் நிலை வாரிசுகளுக்கு சம பாதியளவும் இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு கால் பாகமும் கிடைக்கும்.

பூர்வீக சொத்துக்களை தந்தையின் தந்தை இருந்து இவருக்கும் இவரின் சகோதர சகோதரிகளுக்கும் பாகப்பிரிவினை மூலம் எழுதி வைப்பதன் மூலம் அனைவருமே சுயமான சொத்துக்களின் அதிபதிகள் ஆவர். அந்த சொத்துக்களை அவர்கள் யாருக்கு என்றாலும் எழுதலாம்.

தான செட்டில்மென்ட் மற்றும் பாகப்பிரிவினை

தான செட்டில்மென்ட் மற்றும் பாகப்பிரிவினை செய்யும்போது கண்டிப்பாக பிரச்சனைகள் ஏராளம் வரும். அதனை சரிக்கட்ட குடும்பத்தில் உள்ள நபர்களே போதுமானது. அப்படி முடியவில்லை என்றால் ஊர் பஞ்சாயத்து பெரியவர்கள் வைத்து தீர்க்க வேண்டும். அவ்வாறு முடியவில்லை என்றால் உரிமையியல் நீதிமன்றம் சென்று முறையீட வேண்டும். எப்பொழுதும் கிரையம் செய்து பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும். 100 ரூபாய்க்கு மேல் உள்ள எந்த ஒரு அசையாத சொத்துகள் எதுவாக இருந்தாலும் அதனை ரெஜிஸ்டர் செய்திருத்தல் அவசியம்.

பிரச்சனைக்கான தீர்வு

பூர்வீக பத்திரங்கள் மோசடி செய்திருந்தாலும் அல்லது வேறு ஒரு சொத்து பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் உரிமையியல் நீதிமன்றங்கள் சென்று வழக்கு தொடரலாம். காவல்துறை சென்று புகார் அளித்தாலும் கடைசியில் நீதிமன்றம் தான் அந்த வழக்கை தொடருவார்கள்.

நிலத்தின் மதிப்பு 

இடத்தின் மதிப்பு 

வழிகாட்டு மதிப்பு streetwise