வழிகாட்டு மதிப்பு streetwise - வழிகாட்டு மதிப்பு என்பது ஆங்கிலத்தில் Guideline Value என்பர். ஒரு நிலத்தின் அல்லது மனையின் மதிப்பை துல்லியமாக கணக்கிடலாம். இந்த வழிகாட்டு மதிப்பு சதுர அடியில் மட்டுமே காட்டும். மற்றபடி, சென்ட் கணக்கில் அல்லது ஏக்கர் கணக்கில் எல்லாம் காட்டாது. ஒருவேளை உங்கள் தெருக்களின் நிலங்களை வகைப்பாடு அல்லது காட்டவில்லை எனில் புல எண்களை வைத்தும் சரி பார்க்கலாம். மொத்தமாக இரு வெவ்வேறு வழிகளை பயன்படுத்தி உங்கள் மனையின் சொத்தின் மதிப்பை காண முடியும். ஒன்று உங்களுடைய மாவட்டம், தாலுகா, கிராமம் அல்லது நகரம் இவைகளை வைத்து பார்க்கலாம். இரண்டாவதாக நேரடியாக புல எண்ணை வைத்து மதிப்பை பார்க்க முடியும்.
இந்த Guideline Value வைத்து தான் ஒருவர் மற்றொருவருக்கு விற்க முடியும். இதனால் பல மோசடிகள் மற்றும் இடைத்தரகர்கள் தடுக்கப்படுகின்றன. ஆனாலும் வழிகாட்டி மதிப்பை பதிவு செய்து சந்தை மதிப்போடு சொத்து வாங்குபவரிடம் சொத்தின் உரிமையாளர் பெற்றுக்கொள்கிறார். இதனாலும் பதிவுத்துறைக்கு மிகுந்த நஷ்டமே ஏற்படுகிறது. அப்படி இருந்தும் 2021 மற்றும் 2022 நடப்பாண்டில் சுமார் 12, 700 கோடி வரையும் வருவாய் ஈட்டி இருப்பதாக பத்திரப்பதிவு துறை கூறுகிறது. கீழே கொடுக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி உங்கள் ஏரியா அல்லது ஊரின் மனைகளின் மதிப்புகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
1. அதற்கு பிறகு வழிகாட்டு மதிப்பு என்ற நேவிகேஷனை தேர்வு செய்யவும்.
2. பிறகு வருடத்தை கணக்கிடவும் For Example : 2002 முதல் 2021 என்பதை தேர்வு செய்யவும்.
3. இறுதியாக உங்கள் மண்டலம், தாலுகா மற்றும் கிராமம் போன்ற தகவலை பூர்த்தி செய்யுங்கள்.
குறிப்பு
வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் தான் பதிவு கட்டணங்களும், முத்திரை தீர்வைகளும் செலுத்தப்படுகின்றன.
Patta Chitta