நிலத்தின் அரசு மதிப்பு - நில அங்கீகார மதிப்பு - நிலத்தின் சந்தை மதிப்பு

நிலத்தின் அரசு மதிப்பு, நில அங்கீகார மதிப்பு அல்லது நிலத்தின் சந்தை மதிப்பு - ஒருவருடைய நிலத்தின் கட்டணங்கள் கட்டும் முன்னர் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை கணக்கிடுவது மிகவும் முக்கியமான செயலாகும். ஏனெனில் அது மிகவும் அவசியமாகும். தெள்ளத்தெளிவாக சொன்னால் இதனை ஊர்களில் Guideline Value என்பார்கள். அதை நாம் எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்.

நிலத்தின் அரசு மதிப்பு


நில அங்கீகார மதிப்பு 

அங்கீகார மதிப்பு என்பது ஒரு மனையின் சரியான விலையை அரசு நிர்ணயம் செய்வது ஆகும். உதாரணமாக ஒரு மனை 50 சதுர அடிகளை கொண்டுள்ளது. இதன் விலை சொத்தின் உரிமையாளர் அவர்கள் 1, 00, 000 என்று கூறுகிறார். ஆனால் வழிகாட்டி மதிப்பின் படி பார்த்தால் அதன் விலை 2, 00, 000 த்தை தாண்டுகிறது. இப்போது பதிவுத்துறையில் 2, 00, 000 ரூபாய்க்கு தான் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணங்கள் வசூல் செய்வார்கள். இப்போது லாபம் சொத்தின் உரிமையாளருக்கு தான்.

Tnreginet ஒரிஜினல் சைட் இல் நிலத்தின் மதிப்பை அப்டேட் செய்துள்ளனர். நம் போர்டலில் ஏற்கனவே இதை பற்றிய செய்திகளை அவ்வப்போது கொடுத்துளோம். ஒருவருடைய நிலத்தை விற்பதற்கோ அல்லது அதை பற்றி தெரிந்து கொள்ள நமக்கு வழிகாட்டி மதிப்பை கணக்கிடுவது அவசியமாகும். தற்போது அதற்கு நீங்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தான் கூற வேண்டும். உங்கள் சொந்த ஊரின் தெரு முதற்கொண்டு மதிப்பை கணக்கிடலாம். அதற்கு நீங்கள் tnreginet வெப்சைட் ற்கு சென்று லாகின் செய்யுங்கள்.

Patta Chitta

நிலத்தின் சந்தை மதிப்பு

மேற்கண்ட அங்கீகார மதிப்பில் மனையின் விலை சொத்தின் உரிமையாளர் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக உள்ளது. இருந்தாலும் பதிவுத்துறையானது அதற்கு சரியான விலையை நிர்ணயம் செய்கிறது. ஆனால் சந்தை மதிப்பு அப்படியில்லாமல் சொத்தின் உரிமையாளர் வழிகாட்டி மதிப்பினை விட இருமடங்கு கூடுதலாக சொன்னாலும் வழிகாட்டு மதிப்பினையே உரிமையாளர் அவர்கள் பதிவு செய்ய சொல்வார். அதாவது ஒரு மனையின் விலை அரசு மதிப்பில் ரூபாய் 1, 00, 000 மட்டுமே. ஆனால் மனையின் ஓனர் அவர்கள் அதனை விட கூடுதலாக 2, 00, 000 உயர்த்தி 3, 00, 000 என்று விலையை சொல்கிறார். இதனை வாங்கும் நபரும் சரியென ஒப்புக்கொண்ட பின்னரும் ரூபாய் 1, 00, 000 க்கு மட்டுமே அவர் பதிவு செய்கிறார். இப்படியும் பதிவுத்துறையிலும் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது கூடுதலாக வசூல் செய்யப்பட்ட ரூபாய் 2, 00, 000 க்கு எந்த வித கட்டணங்கள் கட்டாமல் உரிமையாளர் வாங்கி கொள்கிறார்.

வழிகாட்டு மதிப்பு