ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி தமிழ்நாடு - இ சேவை மையம் அல்லது வீட்டில் இருந்தபடியே அப்ளை செய்து கொள்ளலாம். இதற்கு இ சேவை மையம் மூலம் பெறப்படும் தொகை ரூபாய் 60 லிருந்து 100 ரூபாய் ஆகும். தற்போது புதிதாகவும் அல்லது பழைய ரேஷன் அட்டையை ஸ்மார்ட் கார்டாக மாற்றும் வசதியை உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மக்களுக்கு இணையத்தளம் மூலம் உருவாக்கி தருகிறது.
Tnpds பொது விநியோக திட்டத்தின் மூலம் எளிமையாக ரேஷன் ஸ்மார்ட் அட்டையினை அப்ளை செய்து வாங்கி கொள்ளலாம். குடும்ப தலைவர் புகைப்படம், மற்ற உறுப்பினர்கள் இருந்தால் அவர்களின் ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ் மற்றும் விவரங்கள் இருந்தாலே ஐந்து நிமிடத்தில் அப்ளை செய்து கொள்ள முடியும்.
குடியிருப்பு சான்றிதலுக்கு தேவையான ஏதாவது ஒரு ஆவணம்
1. ஆதார்
3. குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீடு ஆணை
5. தொலைபேசி கட்டணம்
6. சொத்து வரி
7. வங்கி கணக்கு முதல் பக்கம்
8. மின்சார கட்டணம் ரசீது
9. பாஸ்போர்ட்
10. எரிவாயு நுகர்வோர் அட்டை.
இதில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து குடியிருப்பு சான்றிதலுக்காக சூஸ் செய்ய வேண்டும். மேலும் குடும்ப அட்டை வகையை சரியாக ஆண்டு வருமானம் மூலம் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அப்ளை செய்த பிறகு குறிப்பு எண் ஒன்று உங்களுக்கு கொடுப்பார்கள். அதனை வைத்து உங்கள் விண்ணப்ப நிலையினை அறிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தின் நிலை முழுமை அடைந்த பிறகு டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் கார்டு வரவில்லை என்றால் டவுன்லோட் செய்த application யை தாலுகா வழங்கல் அதிகாரியிடம் கொடுக்கலாம். குறிப்பு எண் தொலைந்து போனால் உங்கள் தொலைபேசி எண்ணை கொண்டு லாகின் செய்து அறிந்து கொள்ள முடியும்.