நகராட்சி சொத்து வரி ஆன்லைன் கட்டணம்

நகராட்சி சொத்து வரி ஆன்லைன் கட்டணம் தமிழ்நாடு ( Municipality property tax online payment ) - கிராமம், பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்கும் சொத்து வரி மிகவும் அவசியம். இந்த கட்டணம் கட்டாயம் அனைத்து மக்களும் நிச்சயம் கட்ட வேண்டும். கட்டாமல் இருக்கும் நபர்களுக்கு அபராதம் வசூல் செய்யப்படும். அது மட்டுமல்லாமல் நமது சொத்தினை பாதுகாக்க அல்லது பின்னாட்களில் சொத்து பிரச்சனை ஏற்பட்டால் முதலில் தேவைப்படுத்தென்னவோ சொத்து வரி ரசீது தான்.

நகராட்சி சொத்து வரி ஆன்லைன் கட்டணம்


சொத்து வரியை நாம் ஆன்லைன் மற்றும் நேரடியாக கட்டலாம். கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர் மூலம் கட்டலாம். பேரூராட்சி பொறுத்தவரையில் ஆன்லைனில் நேரடியாக கட்டணங்களை சரிபார்த்த பின்னர் கட்டலாம். ஆனால் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் ஒரு கணக்கினை தொடங்கியபின்னர் தான் முழு கட்டணமும் கட்ட நேரிடும். மேலும் ஆறு மாதங்களுக்குண்டான கட்டணம் தென்படும்.

இதையும் படிக்க: சொத்து வரி பெயர் மாற்றம் விண்ணப்பம்

வழிமுறை

1. Tnurbanepay இணையத்தளத்தில் கணக்கினை தொடங்குங்கள். அப்படி தொடங்கவில்லை என்றால் இடது பக்கத்தில் New registration என்று இருக்கும். அதனை செலக்ட் செய்து கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்யவும்.

2. புதிய கணக்கினை முடித்துவிட்டீர்கள் என்றால் மறுபடியும் Official Tnurbanepay இணையத்தளத்தில் சென்று லாகின் செய்து கொள்ளுங்கள்.

3. லாகின் செய்தவுடன் services என்று மனுவை தேர்வு செய்யுங்கள். அதில் Tax Calculator தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் ஏரியா, கிராமம், பில்டிங், அப்ரூவல், தெரு பெயர், எவ்வளவு ஸ்கொயர் பீட் மற்றும் எத்தனை மாடி என்று அப்டேட் செய்ய வேண்டும்.

4. அப்டேட் செய்தவுடன் உங்களுக்கான கட்டணம் அங்கேயே கொடுக்கப்படும்.

குறிப்பு

இந்த இணையத்தளம் நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு பொருந்தும். மேலும் சென்னை மாநகராட்சியில் வசிப்பவர்களுக்கு இந்த இணையத்தளம் பொருந்தாது. மற்ற மாநகராட்சிகளுக்கும் தனித்தனி ஆன்லைன் போர்டல் வசதி உள்ளது. 200 க்கும் மேற்பட்ட நகராட்சிகலள் அனைத்தும் மேற்கண்ட தமிழ்நாடு அரசு இணையதளத்தில் பணத்தை கட்டி கொள்ளலாம்.

இதையும் காண்க: வீட்டு வரி ரசீது பெறுவது எப்படி