சொத்து வரி பெயர் மாற்றம் விண்ணப்பம்

சொத்து வரி பெயர் மாற்றம் விண்ணப்பம் - சொத்து வரி என்பது நமது வீட்டின் சொத்தின் நேரிடையான வரி எனப்படுவது ஆகும். இதை வருடத்திற்கு ஒரு முறை நமது நகராட்சி மற்றும் மாநகராட்சி கலெக்ட் செய்து வருகிறது. இதை ஒரு சிலர் கட்ட மறுக்கின்றனர். அவ்வாறு கட்ட தவறினால் 1 முதல் 2 சதவீதம் வரை மாத அபராதம் செலுத்த நேரிடும்.

சொத்து வரி பெயர் மாற்றம் விண்ணப்பம்


அப்டேட் ஏப்ரல் 02, 2022

தமிழகத்தில் சொத்து வரி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அவற்றில் சென்னை போன்ற மாநகராட்சிகளில் 0 - 600 சதுர அடிக்கு 50 சதவீதமும், 601 - 1200 சதுர அடிக்கு 75 சதவீதமும் 1201 - 1800 சதுர அடிக்கு 100 சதவீதமும் 1800 சதுரடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு 150 சதவீதமும் உயர்த்தி உள்ளார்கள்.

மற்ற மாநகராட்சிகளுக்கு,

600 - 25 சதவீதம் 

601 - 1200 - 50 சதவீதம் 

1201 - 1800 - 75 சதவீதம் 

1800 க்கு மேல் 100 சதவீதமும் சொத்து வரியாக வசூல் செய்யப்பட இருக்கிறது.

சொத்துவரி பெயர் மாற்றம்

இதை எதற்காக மாற்ற வேண்டுமென்றால் சொத்து வேறு ஒருவர் பெயரில் இருந்தால் உங்களால் அந்த சொத்தை விற்க அல்லது அனுபவிக்க 100 சதவீதம் முடியாது. பட்டா பத்திரம் அனைத்துமே உங்கள் பெயரும் ஆனால் சொத்து வரி மாற்றாமல் இருந்தால் அது மிக பெரிய தவறே. மேலும் அந்த பத்திரம் அடமானம் அல்லது கடன் பத்திரமாக எங்கும் நாம் பணம் வாங்குவது கடினம் தான். இதை தவிர்த்து எதிர்காலத்தில் எந்த வித பிரச்னையும் வராமலும் இருக்க சொத்து வரி மிகவும் அவசியமானது.

நீங்கள் உங்கள் ஊரில் உள்ள கிளெர்க் இடம் சென்று எனக்கு சொத்து வரி பெயர் மாற்ற வேண்டும் என்று அவரிடம் சொல்லுங்கள். அவர் அதற்கான ஒரு படிவத்தை கொடுப்பார். அதனை பூர்த்தி செய்து அதில் கேட்கும் ஆவணங்களையும் இணைத்து அவரிடம் கொடுத்து விடுங்கள். அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் உங்கள் அடையாள அட்டை, பத்திரம் நகல், கடைசியாக கட்டிய சொத்து வரி ரசீது, NOC form மற்றும் இதர ஆவணங்கள் ( படிவத்தில் குறிப்பட்டுருக்கும் ) அனைத்தையும் அதில் இணைத்து விடுங்கள். முக்கியமாக நீங்கள் எல்லா சொத்து வரிகளையும் கட்டி இருக்க வேண்டும். சொத்து வரியை ஆன்லைன் இல் கட்ட தமிழக அரசு வழி வகுத்துள்ளது. 

சொத்து வரியை எப்படி ஆன்லைனில் கட்டுவது

1. Tnurbanepay இணையதளம் செல்லுங்கள்


2. Quick Payment என்ற Option யை தேர்வு செய்யுங்கள்


3. தேர்வு செய்த பின்னர் நீங்கள் Property Tax செலக்ட் செய்யுங்கள்


4. பிறகு உங்கள் சொத்து வரி எண் அதில் என்டர் செய்யுங்கள்.

வீட்டு வரி ரசீது download

வீட்டு வரி ரசீது பெயர் மாற்ற விண்ணப்பம்