குடிசை மாற்று வாரியம் வீடு கட்டும் திட்டம் 2023

குடிசை மாற்று வாரியம் வீடு கட்டும் திட்டம் 2023 விண்ணப்பம் வீடு வாங்குவது எப்படி ( கோயம்புத்தூர், சென்னை, முகவரி, திருநெல்வேலி, திருச்சி முகவரி மற்றும் மதுரை முகவரி ) - தமிழ்நாடு குடிசை வாரிய மாற்றத்தை 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நோக்கமே 2023 ஆம் ஆண்டுக்குள் குடிசையில் வாழும் மக்கள் அனைவரும் நகர்புறத்தில் வீடுகள் கட்டி வசிக்க வேண்டும் என்பதே. தமிழ்நாடு மாநிலம் இலவச மானியம், இலவச வீடு வழங்கினாலும் மத்திய அரசும் அதற்கு துணை புரிகிறது.

குடிசை மாற்று வாரியம் வீடு கட்டும் திட்டம் 2023


1. அபார்ட்மெண்ட் வீடுகள் ( AHP ) ( நகர்ப்புறம் )

350 சதுர அடியில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்து அதற்கு மாநிலம் சார்பில் 07 லட்சமும் ஒன்றியம் சார்பில் ஒன்றரை லட்சமும் தருகிறார்கள். இதில் பயனாளர்களின் பங்களிப்பு நான்கில் ஒரு பங்கு அதாவது 66, 000 முதல் 06 லட்சம் வரையும் ( அவர்கள் கொடுக்கப்படும் தொகை ரூபாய் 15 லட்சம் இருந்தால் ) கொடுத்தால் உங்களுக்கு ஒரு அபார்ட்மெண்ட் ( அடுக்குமாடி ) வீடு ரெடி.

முதலமைச்சர் வீடு திட்டம் 2024

2. தனியாக வீடு கட்டுதல் ( BLC )

நிலம் இருந்து அதில் தானாக வீடு கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூபாய் 1, 50, 000 மற்றும் மாநில அரசு ரூபாய் 60, 000 என மொத்தமாக இரண்டு லட்சத்து பத்தாயிரம் மானியமாக வழங்குகிறார்கள்.

தகுதிகள்

அ. பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தோர்.

ஆ. வீடு இல்லாமல் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள்.

இ. ஆண்டு வருமானம் ரூபாய் 3, 00, 000 குறைவாக இருப்பவர்கள்.

3. மானியத்தோடு வீடு கட்டுதல்

பிரதான் மந்திரி ஆவாஸ் திட்டத்தின் கீழ் வழங்கும் திட்டம் இது. ரூபாய் 2, 67, 000 வரையும் மானியமும் தேசிய வீட்டுவசதி வங்கி, முகமை நிறுவனங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் மானியம் மற்றும் கடன்களை வாங்கி கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: 11 மாத வாடகை ஒப்பந்த வடிவம்

4. பழுதடைந்த வீட்டினை புதுப்பித்தல்

ஏற்கனவே அரசு சார்பில் கட்டி கொடுத்த அபார்ட்மெண்ட் வீடுகள் பழுதடைந்து இருந்தால் அதனை சீரமைக்க மானியம் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதேபோன்று வாடகை வீட்டு வசதி வாரியம், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு திட்டம் என பல்வேறு திட்டங்கள் உள்ளமையால் பயனாளர்கள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

குறிப்பு

இந்த மேம்பாட்டு வாரியம் உங்கள் மாவட்டங்களில் தென்பட்டால் நேரடியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள் அல்லது Cmcell மூலம் விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு வீடு ரெடி ஆகினால் அவர்களே உங்கள் காண்டாக்ட் செய்வார்கள்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைச்சர் பெயர் 2024

தமிழ்நாட்டின் குடிசை பகுதி மாற்று வாரியத்தின் அமைச்சர் பெயர் என்னவென்றால் மாண்புமிகு. திரு. ஈரோடு முத்துசாமி அவர்கள் தான்.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் விண்ணப்பம் Pdf