11 மாத வாடகை ஒப்பந்த வடிவம்

11 மாத வாடகை ஒப்பந்த வடிவம் ( 11 months rental agreement format in tamil ) - வீடு வாடகைதாரர் எப்போதும் வாடகைக்கு வருபவர்களிடம் ஒப்பந்தம் அதாவது Agreement ஒன்று போடுவார்கள். இது எதற்காக என்றால் வாடகைதாரருக்கும் வாடகை விடுபவர்களுக்கும் உள்ள ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் ஆகும். இதனை இருவரும் கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும்.

11 மாத வாடகை ஒப்பந்த வடிவம்


பொதுவாகவே அனைவரும் 11 மாதம் மட்டுமே மட்டுமே அக்ரீமெண்ட் போட்டுக்கொள்கிறார்கள். ஏனெனில் 12 மாதம் ஒப்பந்தம் போட்டால் நிச்சயம் பதிவுத்துறையில் கட்டாயமாக பதிவு செய்தே ஆக வேண்டும். அதனால் தான் பெரும்பாலும் ஒப்பந்தத்தை 11 மாதம் மட்டுமே போட்டுக்கொள்கின்றார்கள்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: வீட்டு வாடகை சட்டம் 2023

11 மாத வாடகை ஒப்பந்த பத்திரம் மாதிரி

50 ரூபாய் அல்லது 100 ரூபாய் பத்திரத்தில் கைப்பட எழுதினாலும் சரி அல்லது Typing செய்தாலும் சரி இருதரப்பினரின் முழு விவரங்கள் முதல் பக்கத்தில் எழுத வேண்டும். ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் அனைத்தும் பின்புறம் இருக்க வேண்டும். 11 மாத வாடகை ஒப்பந்தம் என்றாலும் பதிவு செய்யலாம். ஒருவேளை பதிவு செய்ய விருப்பமுள்ளதெனில் இருதரப்பினரும் சம பாதியளவு பணம் கொடுக்க வேண்டும்.

இதையும் படியுங்க: வாடகை ஒப்பந்த பத்திரம் Pdf