முதலமைச்சர் வீடு திட்டம் 2022

முதலமைச்சர் வீடு திட்டம் 2022

முதலமைச்சர் வீடு திட்டம் 2022 - தமிழ்நாடு அரசு மக்கள் பயன்பெறும் வகையில் சூர்ய மின்சக்தி கொண்ட பசுமை வீடு திட்டம் 2011 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதாவது வருடத்திற்கு 60000 வீடு என்ற எண்ணிக்கையில் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. அதன் தொகையாக 1.80 லட்சம் இருந்ததை 2.10 லட்சமாக உயர்த்தி உள்ளனர்.

அப்டேட் மார்ச் 30, 2022

முதலமைச்சர் அவர்கள் மேலும் 20, 000 வீடுகளை இலவச திட்டங்களை அமல்படுத்த உள்ளார்கள். இதற்காக நிதி ஒதுக்கீடு 499 கோடி ஆகும். முதற்கட்டமாக 299 கோடியை நிர்ணயித்து கொள்கின்றனர்.

முதலமைச்சர் வீடு திட்டம் 2022


முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் 

இதனால் மக்கள் எளிதில் இத்திட்டத்தினை பெற முடியும். இதற்காக மக்கள் வெளியில் சென்று அப்ளை செய்ய வேண்டும் என்பதில்லை. மாறாக கிராம புறங்களில் ஊரக வளர்ச்சி ததுறைகளில் நாம் அப்ளை செய்யலாம். அதற்கான விளக்கங்கள் அந்த ஊராட்சி பணியாளர்கள் உங்களிடம் கூறுவார்கள்.

தகுதியானவர்கள்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நபர்கள் அனைவரும் இதற்கு தகுதியானவர்கள் ஆவர். பயனாளர் எந்த வித இலவச வீடு திட்டத்தில் இருக்க கூடாது. அப்படி ஏற்கனவே அப்ளை செய்து இருந்தால் கண்டிப்பாக இந்த பசுமை வீடு திட்டத்தினை பெற முடியாது.

பயனாளர்கள் இடம் 300 சதுர அடிக்கு இருத்தல் அவசியம். வீட்டுமனை பட்டா சம்பந்தப்பட்டவர் பெயரில் இருக்க வேண்டும். முக்கியாக அதில் வில்லங்கம் இருக்க கூடாது. கான்கிரீட் வீடு அல்லது கூரை இருக்கும் நபர்களுக்கு இந்த திட்டம் கிடையாது. இந்த திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.

வீடு இல்லாத மக்கள் கண்டிப்பாக அப்ளை செய்ய வேண்டும். நிச்சயமாக வீடு திட்டம் உங்களுக்கு பயனளிக்கும். இதற்க்காக மாநில மற்றும் மத்திய அரசு மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அதனை மிகவும் பயனுள்ளதாக மக்கள் உபயோகபடுத்த வேண்டும்.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் 

பிரதமரின் இலவச வீடு திட்டம்

Tn.Gov.in