EC என்றால் என்ன

EC என்றால் என்ன ( EC சான்றிதழ் ) - EC என்பது ஒருவரின் சொத்து யாருடைய பெயருக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அந்த இடத்தின் அல்லது சொத்தின் மொத்த வரலாறை காண்பிப்பது, அது அடமான பத்திரமா கடன் பத்திரமா விற்பனை பத்திரமா மற்றும் அதன் விவரங்கள் அடங்கிய தொகுப்பு ஆகும். மேலும் அதில் சர்வே எண், நிலத்தின் தன்மை, சொத்தின் விவரம், சொத்து எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவர் போன்ற அனைத்து விவரங்களும் அதில் அடங்கும். அதில் யாராவது வில்லங்கம் போட்டுகிறார்களா என்பதை துல்லியமாக நாம் பார்க்க இயலும்.

EC என்றால் என்ன


நீங்கள் ஒரு நிலத்தை வாங்க முயல்கிறீர்கள் என்றால் சொத்து விற்கும் நபரிடம் பட்டா மற்றும் பத்திரம் அவர் பெயரிலும் இருந்தாலும் கண்டிப்பாக வில்லங்கம் போட்டு பார்க்க வேண்டும். அப்பொழுது தான் அந்த இடத்தை யார் யார் வாங்கி இருக்கிறார்கள் யார் யார் விற்று இருக்கிறார்கள் மற்றும் இதர விவரங்களை நாம் காண இயலும். வில்லங்கம் பார்ப்பதற்கு புல எண் மட்டும் போதுமானது. 

பத்திரம் EC பார்ப்பது எப்படி

1. முதலில் நீங்கள் tnreginet.Gov.in official இணையத்தளம் சென்று விடுங்கள்

2. பிறகு நீங்கள் மின்னணு சேவை தேர்வு செய்து வில்லங்க சான்று செலக்ட் செய்து வில்லங்க சான்றிதழை பார்வையிட என்ற option யை தேர்வு செய்யுங்கள்.


3. மண்டலம், மாவட்டம், சார் பதிவாளர் அலுவலகம், ஆரம்ப தேதி மற்றும் முடிவு தேதியை அதில் என்டர் செய்யுங்கள்.


4. கிராமம் மற்றும் புல எண் விவரங்களை அதில் கொடுக்கவும்.

5. உட்பிரிவு எண் option தான்.

6. தேடுக என்று கொடுக்கவும். வில்லங்க சான்றிதழ் டவுன்லோட் ஆகும். 

வீட்டு பட்டா எப்படி பார்ப்பது