வீட்டு பட்டா பார்ப்பது எப்படி

வீட்டு பட்டா பார்ப்பது எப்படி - வீட்டு பட்டாமட்டுமல்ல நிலத்தின் பட்டா எண் பார்ப்பது என்பது ஒன்றே. ஆனால் கிராம நத்தம் சார்ந்த வீட்டு பட்டாவும் கூட்டு பட்டாவும் கலந்து இருக்கும். பொதுவாக பட்டா என்பது ஒரு நிலத்தின் அல்லது மனையின் சொந்தக்காரராக யார் இருக்கிறார் என்றும் எவ்வளவு இடம் மற்றும் முத்திரை தீர்வை கொண்டு இருக்கும். 

வீட்டு பட்டா பார்ப்பது எப்படி


நாம் இணையத்தளத்தில் எடுக்கும் பட்டா வெறும் கம்ப்யூட்டர் பட்டா தான். ஒரிஜினல் கிடையாது. நாம் எடுக்கும் கம்ப்யூட்டர் பட்டாவானது தாசில்தாரின் முத்திரை மற்றும் கையெழுத்து இருந்தால் தான் அது ஒரிஜினலாக கருதப்படும். அந்த பட்டாவை நீங்கள் யாரிடம் உங்கள் நிலத்தை விற்கப்போகிறார்களோ அவர்களிடம் உங்கள் பட்டா மற்றும் பத்திரத்தை மட்டும் காண்பியுங்கள். ஏனென்றால் பின்னாளில் அது மோசடியாக மாற வாய்ப்புள்ளது.

பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி

தொலைந்த பத்திரம் பெறுவது எப்படி

வீட்டின் பட்டா பார்ப்பது எப்படி 

வீட்டின் பட்டாவை வெறும் ஒரு நிமிடத்தில் எந்த வித கட்டணமும் செலுத்தாமல் பார்க்கலாம். கீழே உள்ள படிகளை நீங்கள் பின்பற்றி உங்கள் வீட்டின் பட்டாவை எடுத்து கொள்ளுங்கள். இதனை வறிவைத்துறைனரால் வழங்கப்படுகிறது.

படி 1

Eservices வெப்சைட் வழியே செல்லுங்கள் 

படி 2

கிட்டத்தட்ட எட்டு விதமான தலைப்புகள் இருக்கும். அதில் முதல் தலைப்பான பட்டா/சிட்டா/விவரங்கள் சரிபார்க்க என்பதை தேர்வு செய்தல் வேண்டும்.

படி 3 

எந்த இடத்தின், மனையின், வீட்டின் பட்டா வேண்டுமோ அதன் முகவரிகளான வட்டம், மாவட்டம் மற்றும் தாலுகா செலக்ட் செய்ய வேண்டும்.


படி 4

உங்களுக்கு பட்டா எண் மறந்து விட்டது என்றால் புல எண்ணை தேர்வு செய்து கடைசியில் உள்ள குறியீட்டை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பட்டா வந்து விடும்.


சிட்டா என்றால் என்ன