-->
பூர்வீக சொத்து என்றால் என்ன

பூர்வீக சொத்து என்றால் என்ன

பூர்வீக சொத்து என்றால் என்ன - பூர்வீக சொத்து என்பது உங்களுடைய தாத்தா மற்றும் அவர்களின் அப்பா வின் சொத்து ஆகும். அதாவது மொத்தமாக நான்கு தலைமுறைகள் அதனை அனுபவிக்கலாம். 

உதாரணமாக உங்கள் அப்பா அந்த சொத்து வைத்திருக்கிறார் என்று வைத்து கொள்ளலாம். அது உங்கள் அப்பாவின் தாத்தா சொத்து ஆகும். மேலும் அவர்கள் யாரும் உயில் எழுதி வைக்காமல் இருந்தால் உங்கள் அப்பாவிற்கு நேரிடையாக சேர்ந்து விடும்.

பூர்வீக சொத்து என்றால் என்ன


ஒருவேளை உங்கள் அப்பாவின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இருக்கு மாயின் பாகப்பிரிவினை சண்டை வரும். அவர்கள் அந்த பூர்வீக சொத்து வேண்டாமென்றால் அது உங்கள் அப்பாவிற்கு வந்து சேரும். இன்றயை காலத்தில் யாரும் சொத்து வேண்டாம் என்று சொல்வதில்லை.

மேலும் உங்கள் அப்பாவுடன் பிறந்தவர்கள் பாகப்பிரிவினை கேட்டு பிரித்து கொள்கிறார்கள் என்றால் அதில் எதோ ஒரு பங்கு உங்கள் அப்பாவிற்கு வந்து சேரும். ஆனால் அது இப்பொது தனி சொத்தாக கருதப்படும். அதாவது சுய சம்பாதித்த சொத்து என பொருள்.

உங்கள் அப்பா அந்த சொத்தை யாருக்குவேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். உங்களுக்கு அல்லது வேறு யாருக்கு கூட எழுதி வைக்கலாம். உங்கள் அப்பாவும் உயில் எழுதி வைக்காமல் போனால் அந்த சொத்தானது நேரிடையாக வாரிசுரிமை சட்டம் அடிப்படையில் அவர்கள் பிள்ளைகளுக்கு வந்து சேரும். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. 

பட்டாசிட்டா.கோ.இன் இணையதளம் கூடுதலாக சொத்து சம்பந்தப்பட்ட தகவல்களை அவ்வப்போது வழங்கு வருகிறது. அவற்றை பின்வருவன தலைப்புகளில் காணுங்கள்.

தாயின் சொத்து யாருக்கு 

அப்பா சொத்து யாருக்கு 

தாத்தா சொத்து யாருக்கு 

Fb பேஜ்