பஞ்சமி திதியில் என்ன செய்யலாம்

பஞ்சமி திதியில் என்ன செய்யலாம் - அருள்மிகு வராகி அம்பாளை நாம் இந்த திதி நாட்களில் வழிபடலாம். எதிரிகளின் தொல்லைகள் முற்றிலும் விடுபட இந்த அம்பிகையை வணங்கலாம். அம்பாளின் அவதாரமாக இந்த பஞ்சமுகி அம்பாள் எழுந்தருளியுள்ளார்.

பஞ்சமி திதியில் என்ன செய்யலாம்


செய்ய வேண்டியவை

1. இந்த நாளில் நாம் மருந்து உட்கொள்ளலாம்.

2. எதிரிகளின் மீது நாம் கொடுத்த வழக்குகளை பற்றி பேசலாம் அல்லது செயல்படுத்தலாம்.

3. சுப காரியங்கள் எதுவாக இருந்தாலும் செய்யலாம்.

இதையும் தெரிஞ்சிக்கலாமா: பஞ்சமி திதி

விசேஷமான நாட்கள்

பௌர்ணமி, பஞ்சமி, அஷ்டமி மற்றும் நவமி நாட்கள் இந்த அம்பிகையை நாம் வழிபடலாம். மேலும் ஆவணி, புரட்டாசி மாதங்களில் வருகின்ற பஞ்சமி திதிகள் மிகவும் சிறப்பான பலனை தரும். அது தேய்பிறையில் வருகின்ற நாளாக இருந்தாலும் சரி அல்லது வளர்பிறையில் வருகின்ற நாளாக இருந்தாலும் சரி நாம் வணங்கலாம். இந்த திதிக்கு நாக தேவதை அதிபதியாக இருப்பதால் நாக தோஷம் உள்ளவர்கள் இந்த நாளில் வழிபடுவதன் மூலம் நன்மையை பெற முடியும்.

சற்று முன்: நவமி திதியில் என்ன செய்யலாம்

வழிபடும் நேரம்

திதி வருகின்ற நாளில் உள்ள நேரங்களில் வழிபட்டு கொள்ளலாம் அல்லது காலை 04 மணி முதல் 06 மணிக்குள்ளாகவே வணங்க வேண்டும் ( தினசரி ) . காலையில் முடியாதவர்கள் மாலை விளக்கு வைத்து விட்ட பிறகு அதாவது 06 மணிக்கு மேல் எப்போது வேண்டுமென்றாலும் இந்த அம்பிகையை வணங்கலாம்.

இதையும் படிக்கலாமே: சந்திராஷ்டமம் அன்று செய்ய கூடாதவை

வழிபடும் முறை

அம்பாள் திருவுறுவப்படம் இருந்தால் அவர்களின் முன்னிலையில் மண்சட்டி விளக்கு அல்லது புதிதாக வாங்கப்பட்ட விளக்கில் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். அம்பாளுக்கு பிடித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெண்ணெய் சேர்ந்த தயிர் சாதம், கருப்பு உளுந்து வடை, மாதுளம் மற்றும் நீலநிற சங்கு மலர் இவைகளெல்லாம் படைத்து உங்கள் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இதையும் தெரிஞ்சிக்கலாமா: தசமி திதி நாட்கள்