நவமி திதியில் என்ன செய்யலாம் ( navami 2024 tithi in tamil April ) - வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் ஒன்பதாவதாக இந்த திதி செயல்படுகிறது. எட்டாவது திதியான அஸ்தமிற்கு அடுத்த நாள் இந்த நவமி ஆகும். நவமி என்றால் ஒன்பது ஆகும். மாதத்தில் ஒன்பது மற்றும் இருபத்தி நான்காம் திதியில் இது வருகிறது. இந்த எண்ணிக்கை திதிகளில் அடிப்படையில் வரும். வளர்பிறையில் 96 லிருந்து 108 மற்றும் தேய்பிறையில் 276 லிருந்து 288 வரையுள்ள பாகை தூரத்தில் இந்த திதியானது அமைந்துள்ளது.
காலண்டரில் அஷ்டமி மற்றும் நவமி திதிகளை கண்டுவிட்டால் அந்த நாளில் எந்த வித காரியங்களையும் செய்யக்கூடாது என்று நினைப்பதுண்டு. அப்படி நினைப்பது முற்றிலும் தவறே. ஏனெனில் நவமியில் அருள்மிகு ஸ்ரீ ராமபிரான் அவர்கள் அவதரித்துள்ளார். அவதரித்த நாளில் இருந்தே 14 ஆண்டுகள் வரையும் காட்டிற்கு வனவாசம் சென்றார். இதனால் தான் இந்த நாளில் ஏதாவது விஷயங்கள் செய்தால் அது நிறைவேறாது என்று நமது முன்னோர்கள் கூறியிருந்தார்கள்.
முருகனுக்கு உகந்த ஹோரை
1. நவமி திதியில் குழந்தை பிறந்தால்
இவர்கள் நிச்சயம் வாழ்வில் புகழ் கொண்டு இருப்பார்கள் என்றும் இவர்கள் அவர்களின் குடும்பத்தினை பார்ப்பதில் கவனம் இல்லாமலும் இருக்கும். 09, 18 மற்றும் 27 தேதியில் பிறந்தவர்கள் எந்த வித காரியங்களையும் இந்த திதியன்று தைரியமாக செய்யலாம். இதற்கு சூன்ய ராசிகளாக இருப்பவர்கள் சிம்மம் மற்றும் விருச்சிகமாகும்.
2. நவமி அன்று செய்ய கூடாதவை
இன்றைய தினம் மனதில் குழப்பம் எழ வாய்ப்புள்ளதால் அன்றைய தினம் சண்டை போடுவது, பழி வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
நாளை எந்த ராசிக்கு சந்திராஷ்டமம்
3. நவமி நல்ல நாளா ( அ ) நவமி நாளில் என்ன செய்யலாம்
எதுவெல்லாம் உங்களுக்கு தீர வேண்டுமோ அதனை செய்யலாம். உதாரணமாக கடன் தீர்க்க, எதிரிகளின் வழக்குகளை தொடர, மற்ற பிரச்சனைகளை நீங்க இந்த நாளினை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
இதையும் படிக்க: நவமி அன்று செய்ய கூடாதவை
4. நவமியில் நகை வாங்கலாமா
கூடாது.
5. வழிபாடு
அன்றைய தினம் சரஸ்வதி தேவி, துர்க்கையம்மன் மற்றும் அம்பிகையை நாம் வழிபடலாம்.
6. நவமி பயணம்
கூடாது.
7. நவமி அன்று மொட்டை போடலாமா
கூடாது.
தேய்பிறை நவமி திதி 2024 தமிழ் தேதி
ஏப்ரல் மாதம் 16 ஆம் நாள் மாலை 05.47 முதல் அடுத்த நாள் மாலை 06.59 வரையும் இருக்கிறது.
காதணி விழா செய்ய உகந்த நாள்