நில மோசடி சட்டம்

நில மோசடி சட்டம் ( nila mosadi sattam ) - நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்பவர்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாக ஏறிக்கொண்டே வருகின்றது. இதனால் பொது மக்களுக்கும் நில உரிமையாளர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நில மோசடி சட்டம்


பொதுவாகவே ஒருவருக்கு வெளியூர்களில் உள்ள சொத்துக்கள் தான் அதிகளவில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. ஏனெனில் வெளியூர்களில் உள்ள சொத்துக்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருப்பதில்லை. உதாரணமாக சொன்னால் வெளியூரில் ஒரு நிலம் உள்ளது என்றால் அதனை சரியாக பராமரிக்காமல் அப்படியே விடுவதால் பக்கத்து நிலக்காரரோ அல்லது யாரோ ஒருவரோ உங்கள் நிலங்களை அபகரிக்க 100 சதவீதம் வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க: Patta Chitta online status tamilnadu tamil login

ஒருவர் உங்கள் நிலங்களுக்கான போலியான பத்திரம் மற்றும் பட்டாவை தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து உங்கள் நிலங்களை ஆக்கிரமித்து கொள்கிறார். உங்களுக்கு அது தெரியவருமேயானால் முதலில் நீங்கள் காவல்துறையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் சென்று எதிர்மனுதாரர் மீது புகார்களை கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்க: கிராம நில வரைபடம்

இரண்டாவதாக மாவட்ட சார் பதிவாளர் அலுவலகம் சென்று புகாரினை எதிர்மனுதாரர் மீது கொடுக்க வேண்டும். பிறகு இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்து ஆவணங்களை சரிபார்த்த பின்னர் யாருடையது போலியானது அவர்களுக்கு தண்டனை வழங்குவர். மேலும் அந்த போலியான பத்திரம் மற்றும் வில்லங்க சான்றிதழ் மீதும் இது போலியாக பதிவு செய்த ஆவணம் என்று மாவட்ட சார் பதிவாளர்களே அதில் குறிப்பிடுவார்கள்.

இதற்கு நீங்கள் எப்போதும் உங்கள் நிலங்களை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் நிலங்களில் பொறுப்பு உங்களிடம் தான்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: பட்டா சிட்டா எடுத்தல்