-->
பட்டா சிட்டா எடுத்தல் online Fmb

பட்டா சிட்டா எடுத்தல் online Fmb

பட்டா சிட்டா எடுத்தல் எடுக்க வேண்டும் எடுக்கும் முறை - முன்பு எல்லாம் பட்டா எடுப்பதற்கு ரொம்ப சிரமப்பட்டோம். இப்போது அந்த கஷ்டம் தேவை இல்லை. அனைத்தும் ஆன்லைனிலில் வந்து விட்டது. நீங்கள் வருவாய்த்துறை ஆபீஸ் செல்ல தேவை இல்லை. உங்களுது தொலைபேசி மூலமும் நீங்கள் பட்டா எடுக்கலாம். பட்டா சிட்டா fmb மற்றும் அது எப்படி எடுப்பது போன்ற கேள்விகள் நம் மனதில் எழும். இந்த பட்டா நகல் எதற்கு தேவைப்படுகிறது என்றால் உதாரணமாக உங்கள் ஒரிஜினல் பட்டா தொலைந்துவிட்டது என்றாலும் ஏதாவது அரசு மானியம் அப்ளை செய்ய வேண்டுமென்றாலும் பட்டா மிகவும் முக்கியமாக தேவைப்படும். அந்த சமயத்தில் நாம் பட்டா எண் அல்லது சர்வே எண் மறந்தாலும் பரவாயில்லை எளிதாக எடுத்து கொள்ளலாம்.

பட்டா சிட்டா எடுத்தல்


கேள்விகள்

1. என் பட்டா எண்ணும் தெரியவில்லை மற்றும் புல எண், உட்பிரிவு எண்ணும் தெரியவில்லை எனில் நான் எப்படி நகல் எடுப்பது ? 

இப்போது உள்ள நேரத்தில் உங்கள் ஊர், தாலுகா மற்றும் கிராமம் தேர்வு செய்து உங்கள் பெயரின் முதல் மூன்று எழுத்து போட்டால் போதும் உங்கள் பட்டா நகல் ஆன்லைனிலில் வந்து விடும். ஒருவேளை உங்கள் பெயரை போன்றே ஏகப்பட்ட பெயர்கள் இருக்கும்பட்சத்தில் ஒவ்வொன்றாக பார்த்து செலக்ட் செய்ய வேண்டும்.

இதையும் காண்க: நத்தம் பட்டா இல்லாமல் வீட்டுக்கு வரி

2. தொலைந்துபோன பட்டா எடுக்க இந்த நகல் போதுமானதா இருக்குமா ?

நிச்சயம் இருக்கும். ஏனென்றால் நாம் வருவாய்துறை அலுவலகத்தில் சென்று பட்டா தொலைந்து போனது என்று சொல்லி அதற்கான நகலையும் மற்றும் இதர உங்கள் முகவரி ஆவணங்களையும் கொடுத்தால் அவர்களுக்கு வேலை சுலபமாக இருக்கும்.

இதையும் காண்க: பட்டா நகல் பெறுவது எப்படி

3. இந்த ஆன்லைனில் எடுக்கும் பட்டா நகலை நான் எங்கு உபயோகிப்பது ?

ஒரிஜினல் ஆவணங்கள் கேட்கும் இடத்தினை தவிர மற்ற எல்லா இடங்களிலும் இந்த நகலை யூஸ் செய்யலாம். உதாரணமாக உங்கள் நகை கூட்டுறவு வங்கியில் வைக்க உள்ளீர்கள் என்றால் பட்டா ஒரிஜினல் கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும். மற்ற அரசு பெற கூடிய மானியங்கள் பெற நகல் இருந்தால் போதுமானது. ஆனால் ஒரிஜினல் verify செய்த பின்னர் தான் உங்கள் மானியம் உங்கள் கைக்கு வரும்.

இதையும் படிக்க: நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி

4. நான் கணினி வாயிலாக எடுக்கலாமா ?

நீங்கள் கணினி வாயிலாக கூட இந்த நகலை எடுக்கலாம். அதற்கு நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை. முதலில் நீங்கள் Eservices என்கிற வெப்சைட்க்கு சென்று அதில் உள்ள கேள்விகள் மற்றும் விவரங்கள் என அனைத்தும் fill பண்ண வேண்டும். உங்களுது பட்டா copy யை டவுன்லோட் செய்யுங்கள். 

வில்லங்க சான்று 

பழைய பட்டா