முருகனுக்கு உகந்த ஹோரை

முருகனுக்கு உகந்த ஹோரை - அருள்மிகு முருகப்பெருமானை நாம் தைப்பூசம், ஆடி பெருக்கு மற்றும் பெரிய பெரிய விசேஷ நாட்களில் மட்டுமே அதிகமாக வணங்குகிறோம். அப்படி இல்லாமல் செவ்வாய் ஹோரை, வாரத்தில் வருகின்ற நாள், நட்சத்திர நாள் மற்றும் திதி நாட்களில் வழிபட்டால் மிகுந்த நன்மை ஏற்படும்.

முருகனுக்கு உகந்த ஹோரை


கந்தப்பெருமானுக்கு உகந்த ஹோரையாக இருப்பது செவ்வாய் ஹோரையாகும். இந்த செவ்வாய் ஓரையானது செவ்வாய் கிழமைகளில் மட்டுமல்லாமல் வாரத்தில் உள்ள ஏழு நாட்களிலும் மாறி மாறி வருகின்றன. இதில் செவ்வாய் கிழமையன்று நான்கு மணி நேரங்கள் வருகின்ற செவ்வாய் ஓரையில் கந்தனை வழிபட்டால் தீராத கடன்கள், தீராத நோய்கள் தீரும். இந்த பதிவில் அருள்மிகு கந்தன் அவர்களுக்கு என்னென்ன உகந்ததாக இருக்கிறது  என்பதை ஒவ்வொன்றாக வரிசைப்படி காணலாம்.

முருகனுக்கு உகந்தது

1. பிரசாதம் - தேன் மற்றும் தினை மாவு

2. நாள் எது - செவ்வாய் மற்றும் திங்கள்

3. திதி - சஷ்டி

4. நட்சத்திரம் - கார்த்திகை மற்றும் விசாகம்

5. உணவு - மாம்பழம், வாழைப்பழம்

6. பூ - கடம்ப மலர்

7. நைவேத்தியம் - வடை, சர்க்கரைப்பொங்கல், வெல்லம் மற்றும் பஞ்சாமிர்தம்.

8. நிறம் - செந்நிறம்.

ஓரை அட்டவணை 2023