நிலவரி என்றால் என்ன, நில வரி ரசீது

நிலவரி என்றால் என்ன, நில வரி ரசீது ( Vacant land tax in tamilnadu ) - எப்படி வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி இருக்கின்றதோ அதேபோல் தான் இந்த நிலவரியும் ஒரு வரி ஆகும். விவசாய நிலம் எவ்வளவு விவசாயம் செய்து வருமானம் ஈட்டுகிறோமோ அதில் ஒரு பகுதியை நில வரியாக கட்டிருந்தனர். காலப்போக்கில் எவ்வளவு விவசாயம் செய்தாலும் நிலவரி கட்ட வேண்டாம் என்று இருந்தது.

நிலவரி என்றால் என்ன


முன்னர் எல்லாம் கந்தாயம் என்று ஒன்று இருக்கும். இந்த கந்தாயம் என்பது முன்கூட்டியே நிலவரி செலுத்துதல் ஆகும். அது எத்தனை வருடங்களுக்கு இருந்தாலும் முன்கூட்டியே கட்டி கொள்ளலாம். இன்றும் பழைய மூல பத்திரத்தில் த.ரூ என்று இருக்கும். இந்த த.ரூ என்பது தருகின்ற ரூபாய் என்பது பொருள். ஒவ்வொரு மூல பத்திரத்திலும் த.ரூ 3.50 முதல் 10 இருக்கும். இது நிலத்தின் தரத்தன்மை, உள்ளூர் வரி, உள்ளூர் மிகை வரி, பசலி தீர்வை, தீர்வை ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி அபராதம் மற்றும் புறம்போக்கு நிலம் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு இந்த நிலவரி தீர்மானம் செய்யப்படுகின்றது.

இதையும் பார்க்க: பத்திர பதிவு கட்டணம் குறைப்பு

நிலவரி செலுத்தும் முறை

தற்போது வரையும் ஆன்லைனில் செலுத்தும் வசதி இல்லை. ஆனால் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று பணத்தை கட்டி ரசீதினை பெறலாம். மேலும் உங்கள் நிலத்தின் பட்டா, அடங்கல் போன்றவைகளை காட்டி எவ்வளவு நிலவரி செலுத்த வேண்டும் என்பதனையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் பார்க்க: ஆக்கிரமிப்பு சட்டம் 1905