தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 Pdf

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 Pdf - இன்றைய காலக்கட்டத்தில் ஆக்கிரமிப்புகள், அபகரிப்புகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளது. மற்றொரு நிலத்தின் சொத்தில் உரிமை கொண்டாடுவது அல்லது அரசு புறம்போக்கு நிலங்களில் தாமாகவே பயன்படுத்தி கொள்வது. இந்த இரண்டும் அடிக்கடி இன்றைய சூழ்நிலையில் அதிகம் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 Pdf


முதன்முதலில் நில ஆக்கிரமிப்பு சட்டம் கொண்டுவந்த ஆண்டு 1905 தான். இதன் பிறகு இந்த சட்டம் தொடர்பாக எத்தனை சட்டம் வந்தாலும் இது தான் மூலதனம். அரசு புறம்போக்கு நிலங்களில் எந்த வித அனுமதி இன்றி தாமாகவே வசித்தல் அல்லது சாலை வழியை பயன்படுத்தல் அல்லது பொது நோக்கத்திற்காக உள்ள புறம்போக்கு நிலங்களை பயன்படுத்துதல் போன்றவைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும்.

இதையும் படிக்கலாமே: அரசாணை 318 Pdf

உதாரணமாக நீங்கள் ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் வசித்து வருகிறீர்கள் என்றால் யாரோ ஒருவர் அல்லது அரசாங்கமே உங்கள் மீது வட்டாட்சியர் மூலம் புகார் கொடுக்க நேரிடும். அந்த புகாரை பெற்றவுடன் உங்களுக்கு பிரிவு 6 ( 1 ) இன் கீழ் இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தபால் மூலமோ அல்லது வேறு ஏதாவது ஒரு வழியிலோ உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள். இதனையடுத்து நீங்கள் பிரிவு 7 யை பயன்படுத்தி உங்கள் விளக்கங்களை தெரியப்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: வீட்டு பட்டா பார்ப்பது எப்படி

அந்த நிலம் எடுத்தே ஆக வேண்டும் என்று பிரிவு 10 இன் கீழ் மறுபடியும் உங்களுக்கு செய்தி வரும். அதனை மேல்முறையீடு செய்து மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் எடுக்கும் முடிவு வருவாய் துறையினர்கள் பின்பற்றுவார்கள். இந்த தீர்ப்பிலும் உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் நீங்கள் நீதிமன்றம் தான் செல்ல வேண்டும்.

இதையும் தெரிஞ்சிக்கிட்டு போங்க: தான பத்திரம்