தான பத்திரம் என்றால் என்ன - தான பத்திரம் மாதிரி Pdf, தான செட்டில்மெண்ட் பத்திரம் என்றால் என்ன, தான செட்டில்மென்ட் கட்டணம், தான பத்திரம் எழுதுவது எப்படி என்பது பற்றி இங்கே பாப்போம். தனது சொந்தத்துக்குள்ளே நடக்கும் இடம் பெற்று கொள்வது தான பத்திரம் ஆகும். அதாவது அதை நாம் விற்பனை முடியாது. அம்மா அப்பா பாட்டி தாத்தா, தம்பி மற்றும் அக்கா இவர்களுக்குள் யார் வேண்டுமானாலும் யாருக்கும் எழுதி வைக்கலாம்.
இதற்கு முத்திரை குறைந்த செலவில் முடியும். ஒரு சில நேரத்தில் முத்திரை தாள் கட்டணம் பெற பட மாட்டாது. ஏனென்றால் இது சொந்தங்களுக்கு உள்ளே நாடாகும் விஷயங்கள் ஆக இருப்பதால் கட்டண செலவும் மிகவும் குறைவாக இருக்கிறது. மொத்தமாகவே கணக்கிட்டால் ரூபாய் நான்காயிரத்திலே முடியும் இந்த பத்திர செலவு. ஆனால் தற்போது அரசு அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. அது என்னவென்றால் முத்திரை தீர்வை மற்றும் செலவை சொத்து மதிப்பில் இருந்து 1 லிருந்து 2 ஆக உயர்த்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இது குறித்த சுற்றறிக்கை இந்த மாதத்திற்குள் வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.