வாய்மொழி பாகப்பிரிவினை

வாய்மொழி பாகப்பிரிவினை - பத்திர வகைகளில் மிகவும் முக்கிய பத்திரமாக இது கருதப்படுகின்றது. ஏனெனில் அதிகளவில் பிரச்சனை வரக்கூடிய பத்திரங்களில் இதுவும் ஒன்றாகும். பாகத்தை பிரித்து கொடுப்பது இதன் வேலை. இதனை மொத்தமாக மூன்று வகையாக பிரித்து கொள்ளலாம்.

1. குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கும் சொத்து

2. குடும்பம் அல்லாத உறுப்பினர்களுக்கு கொடுக்கின்ற சொத்து

3. வாய்மொழி.

வாய்மொழி பாகப்பிரிவினை


குடும்ப உறுப்பினர்கள்

இதில் முதலில் வருகின்ற சொத்தினை வீட்டில் உள்ள நபர்களுக்கு பாகம் செய்து கொடுக்கலாம். பூர்வீக சொத்தாக இருந்தால் வாரிசு அடிப்படையில் பாகப்பிரிவினை செய்து கொள்ள முடியும். சொத்து வேண்டாம் என்று சொல்லக்கூடிய நபர்களுக்கு விடுதலை பத்திரத்தில் கையெழுத்து வாங்கலாம்.

இதையும் பார்க்க: கிரைய உடன்படிக்கை ஆவணம்

குடும்ப அல்லாத உறுப்பினர்கள்

இரண்டாவதாக குடும்ப அல்லாத உறுப்பினர்களுக்கு சொத்தினை கொடுப்பது ஆகும். வாங்கும் நபர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்தால் அவர்களுக்கு பாகப்பிரிவினை மூலம் சொத்தினை கொடுக்கலாம். அவர்கள் விருப்பப்பட்டால் கூட்டு சொத்தாகவும் கொடுக்கலாம்.

இதையும் பார்க்க: கிராம நத்தம் நிலம் வாங்கலாமா

வாய்மொழி

மூன்றாவதாக இருப்பது தான் வாய்மொழி. இந்த வாய்மொழி என்பது எழுத்துபூர்வகமாக இல்லாமல் வெறும் வாயால் இந்த சொத்து உங்களுடையது அல்லது இந்த பாகம் உங்களுடையது என்று சொல்வது. இதனை பதிவும் செய்ய மாட்டார்கள். ஆனால் ஞாபகம் வைத்து கொள்ள ஒரு பேப்பரில் எழுதி கொள்வார்கள். இதனை கூர்சீட்டு பத்திரம் என்றும் அழைக்கலாம்.

குறிப்பு

எந்த ஒரு சொத்தாக இருந்தாலும் சரி நிச்சயம் பதிவு செய்தே ஆக வேண்டும். பதிவு செய்யாத சொத்தாக இருந்தால் என்றாவது ஆபத்து தான் வரும்.

இதையும் பார்க்க: தீர்வு ஏற்படாத தரிசு