-->
பத்திர பதிவு கட்டணம் குறைப்பு 2023

பத்திர பதிவு கட்டணம் குறைப்பு 2023

பத்திர பதிவு கட்டணம் குறைப்பு 2023 - பதிவுத்துறைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவருவதை நாம் தினசரி பார்த்து வருகின்றோம். போலி பதிவு ஆவணம், மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம், சார் பதிவாளர் அதிகாரம், பதிவு துறை கட்டணம் மற்றும் இதர செய்திகளை Tnreginet அவ்வப்போது சுற்றறிக்கையாக விடுகின்றது.

பத்திர பதிவு கட்டணம் குறைப்பு 2023


விற்பனை, நன்கொடை மற்றும் பரிமாற்றம் போன்றவைகளை பதிவு செய்யும்போது வருகின்ற கட்டணங்களை பதிவுத்துறை குறைத்துள்ளது. அந்த வகையில் குடும்ப உறுப்பினர்களுக்கு வழிகாட்டி மதிப்பில் இருந்து முத்திரை தீர்வை கட்டணம் 5 சதவீதம் மட்டுமே. மேலும் சொத்து வரி மாற்றம் செய்ய 2 சதவீதமும் பதிவு கட்டணமும் 4 லிருந்து 2 சதவீதம் கட்டணமும் குறைத்துள்ளது பத்திரப்பதிவு துறை.

இதையும் பார்க்க: பத்திர பதிவு ஆன்லைன்

குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்கு பதிவு செய்யும்போது முத்திரை தீர்வை 7 சதவீதம் மற்றும் பதிவு கட்டணம் 2 சதவீதம் ஆகும். ஒட்டுமொத்தமாக 2 சதவீத மட்டுமே பத்திர பதிவு கட்டண செலவாகும்.

எடுத்துக்காட்டு 1

லேண்ட் value - 7, 00, 000

முத்திரை தீர்வை - 5 % ( 35, 000 )

பதிவு கட்டணம் - 2 % (  14, 000 )

மொத்த செலவு ரூபாய் 49, 000 ஆகும்.

குறிப்பு

மற்ற பத்திரங்களின் பதிவு கட்டணம் மற்றும் முத்திரை தீர்வை கட்டணம் வேறுபடும்.

இதையும் பார்க்க: பத்திரம் உள்ளது பட்டா இல்லை