நில அபகரிப்பு சட்டம் Pdf

நில அபகரிப்பு சட்டம் Pdf ( நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சட்டம் ) - நிலம் மற்றும் அதனை சார்ந்த இடங்களுக்கு தான் அவ்வப்போது பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் நிலம் வாங்கும் அல்லது விற்கும் நபர்களுக்கு பிரச்சனையே. ஒவ்வொரு முறையும் நாம் வாங்கும் நிலத்தை பட்டா மற்றும் பத்திரம் இரண்டுமே சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக தமிழக அரசு 2011 ஆம் ஆண்டு சிறப்பு நில அபகரிப்பு நீதிமன்றங்களை உருவாக்கியது.

நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி

நில அபகரிப்பு சட்டம் Pdf


நில அபகரிப்பு என்றால் என்ன 

நில அபகரிப்பு என்பது ஒருவர் பிறர் நிலத்தினை தன்னுடைய நிலம் என்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வது ஆகும். இதனை பல்வேறு வகையில் நாம் நம்முடைய நிலத்தினை காப்பாற்றலாம்.

இதையும் படியுங்க: Udr க்கு முந்தைய ஆவணங்கள்

கேள்வி 1

ஒருவர் நிலத்தை சொந்த ஊரில் வாங்கி இருக்கிறார். ஆனால் அவர் வெளியூரில் உள்ளார். அவர் நிலத்தை எவ்வாறு பாதுகாப்பது ?

கண்டிப்பாக அவ்வப்போது நிலத்தினை பார்க்க வேண்டும். இரண்டாவதாக பக்கத்தில் வீடு அல்லது அந்த தெருவில் யாருடமாவது பார்த்துக்க சொல்ல வேண்டும்.

கேள்வி 2

யாரோ ஒருவர் உங்களின் நிலத்தினை அபகரித்து விட்டார். என்ன செய்வது ?

முதலில் உங்களுடைய ஆவணங்களை ரெவின்யூ அலுவலகத்திற்கு சென்று சமர்ப்பித்தால் இரண்டு பேரில் யாரு லேண்ட் owner என்பதை தெள்ள தெளிவாக சொல்லி விடுவார்கள். இதற்காக மனு ஒன்றை எழுதி கொடுக்க வேண்டும்.

இதையும் காண்க: Tslr என்றால் என்ன?

கேள்வி 3

எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நம் நிலத்தினை எப்படி பாதுகாப்பது ?

பத்திரம் ரெஜிஸ்டர் செய்த உடன் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும். முக்கியமாக கூட்டு பட்டாவில்  தனி பட்டாவாக மாற்றிய பின் உங்கள் பெயருக்கு மாற்றி விடுங்கள். அவ்வப்போது வில்லங்கம் செக் செய்து கொண்டே இருக்க வேண்டும். வில்லங்கம் நாம் நம்முடைய தொலைபேசிலே எந்த வித கட்டணமும் இல்லாமல் Tnreginet வெப்சைட் இல் பார்க்கலாம்.

ரெவின்யூ ஸ்டாம்ப்