TSLR என்றால் என்ன?

TSLR என்றால் என்ன? ( tslr meaning in tamil patta sketch extract online ) - பட்டாவை போன்று தான் இந்த ஒரு ஆவணமும் ஆகும். ஒரு மாவட்டம் என்பது கிராம ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் நகராட்சி என்று பிரிக்கப்பட்டு இருக்கும். இதில் கிராமத்தை பொறுத்தமட்டில் பட்டா என்கிற ஆவணம் வருவாய்த்துறை கொடுப்பார்கள். மற்ற மூன்றும் வருவாய்துறையினர்களால் தான் கொடுக்கப்படுகின்றது.

TSLR என்றால் என்ன?


கிராம பஞ்சாயத்து கீழ் வழங்கப்படுகின்ற அல்லது இருக்கின்ற நிலங்கள் அனைத்தும் பட்டா  சேர்ந்தவை. ஆனால் நகராட்சி கீழ் உள்ள அனைத்து ஆவணமும் TSLR ஆகும். இதனை ஆங்கிலத்தில் town survey land registration என்று அழைப்பார்கள். தமிழில் நகர நில அளவைப்பதிவேடு என்பர்.

இதையும் படிக்க: Tamil Nilam login

பட்டாவில் இருப்பதை போன்று தான் இந்த ஆவணத்திலும் இருக்கும். ஆனால் ஒரு சில தகவல்கள் மட்டும் கூடுதலாக இருக்கும். பட்டாவை நாம் பார்க்க மாவட்டம், வட்டம் மற்றும் கிராமம் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் TSLR தெரிந்துக்கொள்ள நகரம், பிளாக் மற்றும் வார்டுகளை தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் படிக்க: Tnreginet. gov. in patta