நகை எடுக்க உகந்த நாள் 2025 ( nagai eduka nalla naal ) - நகை என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகவும் பிடிக்கும் பொருள்களுள் ஒன்று. பொதுவாக தங்கம் வாங்க நல்ல நாட்களில் தான் வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் நடைமுறையில் அது சாத்தயமற்றது. ஏனென்றால் நல்ல நாட்களில் எடுக்கும்போது மீண்டும் நகைகள் வந்து சேரும் என்பது ஒரு வகையான நம்பிக்கை தான். இந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மகாலட்சுஷி தாயாருக்கும் குரு பகவானுக்கும் குபேரனுக்கும் உகந்தது. ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு கடவுளுக்கு சேர்ந்தது என்றே கூறலாம்.
நகை எடுக்க உகந்த கிழமை
வியாழக்கிழமை தங்கம் வாங்கினால் தங்கம் சேர்ந்து கொண்டே போகும் என்பது ஒரு ஐதிகம் என்று சொல்லலாம். வியாழக்கிழமையில் நல்ல நேரம் என்று பார்த்தால் குரு ஓரையில் எடுக்கலாம். குரு ஓரையில் தங்கம் எடுக்கும்போது எப்போதும் தங்கம் சேர அதிக வாய்ப்புள்ளது. பயனாளர்களுக்கு மனதில் ஒரு கேள்வி எழும்பும். அது என்னெவென்றால் இந்த ஓரைகளை நாம் எப்படி தெரிந்து கொள்வதென்று. மிகவும் சுலபான முறையில் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த ஓரைகள் இருப்பதை காண முடியும். அது எப்படி என்றால் நாம் உபயோகப்படுத்தும் காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
கிரக பிரவேசம் முகூர்த்தம்
மங்களகரமான விஷயங்கள் செய்யும் ஆண்கள் அல்லது பெண்கள் இருவீட்டார்களும் செவ்வாய் கிழமைகளில் எடுக்கலாம். செவ்வாய் கிழமை காலையில் ஒன்பது மணி முதல் மதியம் பன்னிரெண்டு மணி வரையும் மாலையில் ஆறு மணி முதல் ஒன்பது வரையும் தங்கத்தை வாங்கி கொள்ளலாம்.
நகை வாங்க உகந்த நாள் 2025
வெள்ளிக்கிழமை நாட்கள் பெண்களுக்கு உரிய நாளாகும். அதற்கு ஆண்கள் அன்றைய தினம் வாங்க வேண்டாம் என்று அர்த்தமில்லை. அந்த நாளில் நகைகளை எடுத்தால் நகைகள் சேர்வதோடு மட்டுமில்லாமல் ஒருவேளை நகைகளை வெள்ளிக்கிழமையில் அடகு வைத்திருந்தாலும் அல்லது ஏற்கனவே வெள்ளிக்கிழமை அன்று நகையை அடகு வைத்திருந்தாலும் எளிதாக மீட்டு எடுத்துக்கலாம்.
2025 பௌர்ணமி நாட்கள் நேரம்
நகை வாங்க உகந்த நட்சத்திரம்
மேற்கண்ட கிழமைகளில் புனர்பூசம் மற்றும் விசாகம் என்கிற நட்சத்திரங்கள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
வெள்ளி வாங்க நல்ல நாள் 2024
வெள்ளிக்கிழமைகளில் வெள்ளி வாங்கினால் உகந்த நாளாக இருக்கும். ஒரு சிலர் சனிக்கிழமை வெள்ளி வாங்கலாமா என்கிற கேள்வி எழுந்து கொண்டே இருக்கும். நிச்சயம் சனிக்கிழமையன்று வாங்கவே கூடாது.
கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள்