மாற்றுத்திறனாளி உதவித்தொகை விண்ணப்பம் pdf ( matruthiranaligal uthavi thogai ) 2000 ரூபாய் வகைகள் மற்றும் பேருந்து கட்டண சலுகை - தமிழ்நாடு அரசு சார்பில் சமூக நலத்திட்ட துறையில் தொடர்ந்து பல அரசாணைகள் மக்களுக்காக வந்த வண்ணம் உள்ளன. இதனால் மக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் இத்தகைய சேவைகள் இருக்கிறது.
இதற்கு முன்னர் ரூபாய் 500, 750 மற்றும் 1000 என இருந்த உதவித்தொகை இனிமேல் ரூபாய் 2, 000 மாத மாதம் சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்கில் சேரும். மேலும் இவர்களுக்கு ஊனமுற்றோர் நல வாரியத்தில் இணைந்து அதில் உள்ள நன்மைகளையும் பெற்று கொள்ளலாம்.
மேற்கண்டது மட்டுமல்லாமல் கல்வி உதவித்தொகைகளையும் அரசாங்கம் கொடுத்து வருகின்றது. அது 1 முதல் 5, 6 முதல் 8, 9 முதல் 12, இளநிலை மற்றும் முதுகலை என தனித்தனியாக ரூபாய் 1000, முதல் 7000 வரை ஆண்டிற்கு வழங்கப்படுகின்றது.
இதுவரையும் அப்ளை செய்ய தவறியவர்கள் அல்லது புதிதாக அப்ளை செய்ய விரும்புவோர்கள் சம்பந்தப்பட்ட சமூக நல துறை அல்லது socialwelfare வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம். என்னென்ன வழிமுறைகள் இருப்பதை கண்டறிய தனி தனி மாவட்ட இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் ஈரோடு மாவட்டம் என்றால் Erode.nic.in வெப்சைட் இல் ஊனமுற்றோர் navigation ற்கு சென்றால் அதன் ஒட்டுமொத்த விவரமும் இருக்கும்.