சமூக நலத்துறை பணிகள் - இது சமூக நலத்துறை மற்றும் மகளிர் நலன்துறையை சேர்ந்தது ஆகும். இதற்கென்று தனியாக அமைச்சரவை உருவாக்கி அதில் அமைச்சரை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. தற்போது அமைச்சராக பதவில் வகிப்பவர் மாண்புமிகு கீதா அவர்கள் உள்ளார்.
சமூக நலத்துறை என்று எடுத்துக்கொண்டால் அதில் ஒவ்வொரு மாவட்டமாக தனித்தனியாக செயல்படுத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலும் திருமண உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவி தொகைகள், சம ஊதிய திட்டம், சமூக சீர்திருத்த சட்டம் மற்றும் இலவச தையல் இயந்திரம் என பல்வேறு சமூகம் சார்ந்த நலன்களை பாதுகாப்பது போன்ற பணிகளை மேற்கொள்வது முக்கிய பணியாகும்.
மாவட்டத்தில் சமூக நல அலுவலர் அலுவலகம் கண்டிப்பாக செயல்படும். புதிதாக உதவித்தொகை அல்லது தகவல்கள் தேவைப்படின் நேரடியாக அல்லது தபால் மூலம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.