ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் - எப்படி ஒரு மாநிலத்திற்கு முதலமைச்சர் பெரிய பொறுப்பில் வகிக்கிறாரோ அதேபோல் தான் ஆளுநரும் ஆவார். ஆனால் இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் குடியரசு தலைவர் அவர்களால் பணி நியமனம் செய்யப்படுகிறார்.
சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சரை பதவி பிரமாணம் செய்கிறார். மேலும் தேர்வு பணியாளர்களின் அதிகாரிகள், தலைமை தேர்தல் அதிகாரிகள் என பல்வேறு பதவி பிராமணங்கள் இவர் செய்து வைக்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 153 இன் படி ஒரு ஆளுநர் மற்ற மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் செயல்படலாம். குடியரசு தலைவர் அவர்கள் நினைத்தால் ஐந்து வருடங்கள் உள்ள அவர் பணியை இன்னும் சில வருடங்களுக்கு நீட்டிக்கலாம்.
பெயரளவில் ஆளுனர் பதவி என்றாலும் நிறைய அதிகாரங்கள் இவருக்கு உள்ளன. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் இவர் ஒப்புதலுக்கு பிறகு தான் அமலுக்கு வரும். இவருக்கு தற்போது வழங்கப்படும் மாத சம்பளம் ரூபாய் 3, 00, 000 லிருந்து 5, 00, 000 வரை உள்ளது.