ஜல் ஜீவன் திட்டம் கட்டணம் புகார் எண் தமிழ்நாடு மிஷன் ( Jal jeevan mission in tamil scheme ) - அனைவருக்கும் இலவச குடிநீர் திட்டம் என இதனை நாம் கூறலாம். இது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டமாகும். மேலும் இதன் நோக்கம் 2024 க்குள் அனைத்து விதமான மக்களுக்கும் இலவசமாக குடிநீர் சேர்வது தான். முக்கியமாக ஊரகப்பகுதிகளில் பெருமளவில் இந்த வசதி தற்போது வரையும் இல்லாத காரணத்தினால் இந்த பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்று பார்த்தால் 2019 ஆகும். ஆகஸ்ட் 15, 2019 ஆம் ஆண்டு இதனை செயல்படுத்த திட்டமிட்டார்கள். மதிய அரசு சார்பில் 2025 -2026 ஆண்டில் சுமார் 1, 42, 000 கோடி செலவில் அனைவருக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சென்னை முகவரி
ஊரக பகுதிகள் என எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் இதுவரை 1.25 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கு வருங்காலங்களில் வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாக துறை தெரிவித்துள்ளது.
தற்போது பஞ்சாயத்து சார்பில் வைப்பு கட்டணமாக ரூபாய் 1, 000 மற்றும் 1, 200 வசூல் செய்யப்படுகின்றது. ஒரு குடும்பத்திற்கு ஒரு இணைப்பு மட்டுமே வழங்கப்படுகின்றது. ஆறு மாதம் ஒருமுறை வீதம் தண்ணீர் வரி கட்ட வேண்டும்.