நீர்நிலை ஆக்கிரமிப்பு புகார் மனு சட்டம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு புகார் மனு சட்டம் 2007, 2014 ( Neer nilai akramippu in tamil pdf download ) - இந்த மனுவினை எங்கே கொடுப்பது போன்ற கேள்விகள் உங்களிடம் இருக்கும். அதற்கான சரியான விளக்கத்தினை நமது Patta Chitta வில் காணலாம். நீர்நிலை என்பது அரசாங்க புறம்போக்கு நிலங்களாகும். இதில் குளம், குட்டை, ஏரி, ஆறு, கால்வாய் மற்றும் இதர நீர் சம்பந்தப்பட்ட புறம்போக்கு நிலங்களை பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் சொல்கிறது.

நீர்நிலை ஆக்கிரமிப்பு புகார் மனு சட்டம்


இதனையும் மீறி ஒரு சிலர் அங்கு விவசாயம் மற்றும் வீட்டடி மனைகளாக உபயோகித்து கொள்கின்றனர். ஒரு சிலர் அங்கே செல்வதால் தொடர்ந்து அதிக மக்கள் அங்கு இடம் பெயர்கின்றனர். இதனால் அந்த இடம் முழுவதும் ஆக்கிரமிப்புக்கு செல்கிறது.

இதையும் படியுங்க: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பு சட்டம்

முதன்முதலாக 1905 ஆம் ஆண்டு தான் இச்சட்டம் தொடங்கியது. இச்சட்டம் தொடங்கி ஒரு சில வருடங்களுக்கு எந்த வித முன்னேற்றம் இல்லாமல் போனது. இதனால் அரசாங்கம் 2007 நீர்நிலை ஆக்கிரமித்தல் மற்றும் 2014 அரசாணை 540 என இரண்டு சட்டங்களை கொண்டு வந்தது.

இதையும் படிக்கலாமே: கிராம நில வரைபடம் fmb online

உங்களுக்கு தெரிந்து அந்த இடத்தில் யாராவது அங்கு ஆக்கிரமிப்பு செய்தால் நீங்கள் தபால் அல்லது நேரில் நேரில் சென்று மனு கொடுக்கலாம். அந்த மனுவுடன் அ பதிவேடு நகல், சர்வே நம்பர், வரைபடம் எனும் Fmb, சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய சான்றிதழ்களை கொடுத்தால் அவர்களுக்கு இன்னும் வேலை சுலபமாகி விடும். இந்த மனுவினை வட்டாட்சியர் அவர்கள் 60 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அப்படி அவர் பதில் அளிக்கவில்லை என்றால் கோட்டாட்சியரிடமும், அவரும் பதில் அளிக்கவில்லை என்றால் மாவட்ட வருவாய் ஆட்சியரிடமும், அவரும் பதில் தரவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடமும் அவரும் பதிலளிக்கவில்லை என்றால் நீதிமன்றம் சென்றும் வழக்கு தொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: பட்டா சிட்டா எடுத்தல்