காரமடை தேர் திருவிழா 2023 தேதி ( karamadai ther festival 2023 date temple ) - அருள்மிகு காரமடை அரங்கநாதசுவாமி கோவில் கோயம்புத்தூரில் எங்கு கேட்டாலும் தெரியாத ஆட்களே கிடையாது என்றே சொல்லலாம். ஏனெனில் இங்கு அரங்கநாதர் அவர்கள் சுயம்பு மூர்த்தியாக அருள் புரிகிறார். இவரை காண முக்கிய திருவிழாக்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவர். அதில் வைகுண்ட ஏகாதசி, மாசி மகம் மற்றும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஐந்து சனிக்கிழமைகளில் மிகவும் விசேஷமாக இருக்கும்.
மாசி மாதத்தில் வருகின்ற மாசி மகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இங்கு திருவிழா நடைபெறும். மொத்தம் பன்னிரெண்டு நாட்கள் வீதம் என விழாக்கள் நடைபெறும். இதில் தேரோட்டமானது இடையில் வருகின்றன. இங்கு மக்கள் அவர்கள் நேர்த்திக்கடனை செலுத்த பந்த சேவைகளை செய்கிறார்கள்.
இதையும் படியுங்க: காரடையான் நோன்பு 2023 நேரம்
அமைந்துள்ள இடம்
கோயம்புத்தூரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து 07 கிலோ மீட்டர் தூரம் இந்த கோவில் உள்ளது. இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இங்கு சுவாமி அவர்கள் சதுர வடிவில் காட்சி அளிக்கிறார்.
இதையும் படிக்கலாமே: திருச்செந்தூர் மாசி திருவிழா 2023 தேதிகள்
காரமடை தேர் 2023 திருவிழா தேதி எப்போது
இங்கு பிப்ரவரி 27 இல் தொடங்கி மார்ச் 10 வரையும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது. இதில் மார்ச் 06 ஆம் தேதியன்று திருப்பெருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: மாசி மகம் 2023 தேதி