திருச்செந்தூர் மாசி திருவிழா 2026 தேதிகள் ஏற்றம் மற்றும் கொடியேற்றம் ( tiruchendur masi festival 2026 dates in tamil ) - அறுபடை வீடுகளில் இரண்டாம் இடத்தினை இந்த திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணி ஆலயம் பெற்றுள்ளது. மற்ற அருள்மிகு முருகப்பெருமானின் ஐந்து வீடுகளும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது. ஆனால் இந்த திருத்தலம் மட்டும் கடற்கரை பகுதியில் அமைந்தது கூடுதல் சிறப்பு. அதனாலேயே வருடத்தில் ஒருமுறை வருகின்ற மாசி மகத்திற்கு இங்கு விழாக்கள் பெரிதளவும் நடைபெறுகிறது.
நமது Patta Chitta இணையத்தளத்தில் ஏற்கனவே மாசி மகத்தின் பதிவுகள் அப்டேட் செய்துள்ளோம். பார்க்க தவறியவர்கள் அந்த பதிவினை பார்த்து விட்டு வாருங்கள். மாசி மகத்தன்று கரையோர நதிகள், குளங்கள், கடல்களில் உள்ள நீரினை நாம் காவிரி மற்றும் கங்கை நீரென்று பாவித்து நீராடினால் நமது பாவங்கள் செல்லும். அதனால் தான் திருச்செந்தூரில் மாசி மக திருவிழாவாக நாம் கொண்டாடுகிறோம்.
தெரிந்துகொள்ள: மாசி மகம் 2026 தேதி
திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா 2026 தேதிகள்
1. 21.02.2026 - கொடியேற்றம்
2. 25.02. 2026 - தீபாராதனை
3. 27.02.2026 - சிவப்பு சாத்தி
4. 28.02.2026 - பச்சை சாத்தி
5. 02.03.2026 - தேரோட்டம்
6. 03.03.2026 - தெப்பம்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: மைத்ர முகூர்த்தம் 2026
