மாசி மகம் 2024 தேதி விரதம் எப்போது வாழ்த்துக்கள் ( masi magam 2023 in tamil ) - மாசி மகம் வருடத்திற்கு ஒரு முறை வீதம் மட்டுமே வரும். அதாவது மாசி தமிழ் மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் எப்போது பௌர்ணமி வருகிறதோ அன்றைய தினம் மாசி மகம் ஆகும். 12 வருடங்களுக்கு ஒரு முறை வருகின்றதை மகா மாசி மகம் தினம் என்றழைக்கிறோம். இது கும்பகோணம் கும்பேஷ்வரர் கோவிலில் வெகு விமர்சியாக நடைபெறும். அதேபோல் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலிலும் இந்த திருவிழாக்கள் வருடத்தில் ஒருமுறை வருகிற மாசி மகத்தில் நடைபெறும்.
இந்த நாள் எதற்காக நாம் கொண்டாடுகிறோம் என்றால் நமது பாவங்களை போக்கவும், பித்ருக்களை வேண்டுவதற்கும், தோஷங்களை போக்கவும் மற்றும் பேறு கிடைக்கவும் நாம் கொண்டாடுகின்றோம். அனைத்து வருடங்களிலும் ஒரே மாதிரி தேதிகள் வராது. வருடா வருடம் தேதிகள் மாறும்.
இதையும் படிக்கலாமே: திருமணம் செய்ய உகந்த மாதங்கள் 2023
கங்கை, காவிரி போன்ற நதிக்கரைக்களில் புனித நீராடி நாம் முன் பின் செய்த பாவங்களை போக்கலாம். அதே சமயத்தில் புனித ஸ்தலங்களுக்கு இந்த நாளில் நாம் செல்வதன் மூலம் இறைவன் அருள் பெறலாம். இந்த நாளில் நாம் அருள்மிகு சிவப்பெருமான், முருகப்பெருமான், அம்பிகை மற்றும் பித்ருக்களை வணங்கி அருள் பெறலாம். நதிக்கரைகள், கடல்கள், குளங்களுக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டில் உள்ள தண்ணீரினை புனித நீரென நினைத்துக்கொண்டு நீராடலாம்.
மாசி மகம் 2023 தேதி நேரம்
ஆங்கில மாதம் மார்ச் 05 இல் இரவு 09.30 க்கு மணிக்கு ஆரம்பித்து மார்ச் 07 விடியற்காலை 12.05 க்கு முடிவடைகிறது.
இதையும் காண்க: திருவண்ணாமலை கிரிவலம் நேரம் 2023