Tnreginet வழிகாட்டி மதிப்பு 2023 - அரசு வழிகாட்டு மதிப்பு 2023 பதிவு இந்த இணையத்தளத்தில் அப்டேட் செய்துள்ளோம். மொத்தமாக 2 லட்சத்திற்கு மேலாக தெருக்களின் வழிகாட்டு மதிப்பு Tnreginet வெப்சைட் இல் இருக்கிறது. நீங்கள் official வெப்சைட்ற்கு சென்று உங்களுடைய வழிகாட்டி மதிப்பை இலவசமாக பார்க்க முடியும். எப்படி உங்கள் மதிப்பை கணக்கிடுவது என்பது பற்றி பின்வரும் பத்தியில் காண்போம். அதில் உங்களுடைய தெருக்களின் மதிப்பை கூட துல்லியமாக பார்க்க முடியும்.
எடுத்துக்காட்டு
வழிகாட்டி மதிப்பு என்பது ஒரு மனையின் அல்லது நிலத்தின் மதிப்பு ஆகும். எடுத்துக்காட்டாக நமது ஊரில் நாம் ஒரு இடம் வாங்குகிறோம் என்றால் அந்த நிலத்தின் உரிமையாளரோ அல்லது ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரோ ஒரு சதுர அடி இவ்வளவு போகிறது என்று கூறுவார். அவர் எதனை அடிப்படையாக கொண்டு இதனை சொல்கிறார் என்பது போல் நமக்கு சந்தேகங்கள் அதிகமாக எழக்கூடும். அதற்காக இரண்டு மதிப்பு பட்டியல்கள் கீழே இணைத்துள்ளோம்.
இதையும் படியுங்க: https tnreginet gov in portal
அரசு வழிகாட்டி மதிப்பு
1. சந்தை மதிப்பு - பக்கத்தில் நிலம் இவ்வளவு மதிப்பு அல்லது அந்த தெருவில் அல்லது ஊரில் இவ்வளவு மதிப்பு என தீர்மானித்து கொள்வது.
2. நிகர வழிகாட்டு மதிப்பு - அரசாங்கம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெருக்களில் ஒவ்வொரு மதிப்பும் ஆன்லைனில் அப்டேட் செய்திருக்கும். அதாவது அந்த இடத்தினை பொறுத்து மதிப்புகளை அப்டேட் செய்து இருக்கும். அதன் அடிப்படையில் தான் பத்திரம் பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் அந்த மதிப்பிற்கு ஏற்றவாறு முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணங்கள் செலுத்துவோம்.
இதையும் காண்க: 2400 சதுர அடி எத்தனை சென்ட்
குறிப்பு
நீங்கள் ஒரிஜினல் இணையத்தளம் சென்று உங்கள் ஊரின் தெருக்களில் உள்ள நிலங்களின் மதிப்பு வரவில்லை என்றால் பக்கத்து நிலமும் அல்லது ஊரில் உள்ள நிலங்களின் மதிப்பு போட்டு பார்க்கவும்.