இலவச மின்சாரம் விவசாயம் 2024

இலவச மின்சாரம் விவசாயம் 2024 - தமிழ்நாடு மின்சார வாரியம் விவசாய மின் இணைப்பு இப்போது இலவசமாக சுமார் ஒரு லட்சம் பேருக்கு தருகிறது. இதில் இரண்டு scheme அப்ளை செய்தவர்கள் மட்டுமே இந்த திட்டம் பயன்படுத்த முடியும். 25, 000 மற்றும் 50, 000 Scheme விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சம் பேர் மட்டுமே இந்த இலவச மின்சார திட்டத்தை பெற முடியும். அது ஏப்ரல் 01, 2012 முதல் மார்ச் 31, 2018 வரையில் விண்ணப்பித்த 25, 000 மற்றும் 50, 000 திட்டங்களில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த மின்சார திட்டம் 01. 12. 2021 அன்று அமல்படுத்தப்பட்டது.

இலவச மின்சாரம் விவசாயம் 2024


பல நாட்கள் காத்திருந்த விவசாயிகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இரண்டு புகைப்படங்கள், கிணறு செர்டிபிகேட், கிராம நிர்வாக அலுவலகர் சான்று ( நான்கு எல்லைகள் இருப்பதற்கான சான்று ), அடங்கல் மற்றும் சிட்டா போன்றவைகள் தயார் நிலையில் ஏழை விவசாயிகள் வைத்திருக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

தகுதியான மக்களுக்கு நோட்டீஸ் ஒன்று வழங்கப்படும். அதை வைத்து தான் உங்களுக்கு மின்சார திட்டங்களை வழங்குவார்கள். ஒரு சில நேரத்தில் இந்த நோட்டீஸ் வர தாமதாக இருக்க கூடும். அந்த சமயம் நிதானம் காக்க வேண்டும்.

மின் இணைப்பு எண் சரிபார்க்க

வீட்டு மின் கட்டண விவரம் 2024

Tangedco