-->
வீட்டு மின் கட்டண விவரம் 2022

வீட்டு மின் கட்டண விவரம் 2022

வீட்டு மின் கட்டண விவரம் 2022 - ஒவ்வொரு வீட்டின் மின்சாரம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில் மாதத்திற்கு ஒருமுறை மின்சார கணக்கெடுப்பு நடைமுறைக்கு கொண்டு வருகிறது. வீட்டின் மின்சாரம் முன்பெல்லாம் இலவசம் கிடையாது. ஆனால்  தற்போது 0 முதல் 100 யூனிட் வரையும் பயன்படுத்தக்கூடிய மின்சாரம் முற்றிலும் இலவசமே.

வீட்டு மின் கட்டண விவரம் 2022


எடுத்துக்காட்டு 1

உங்கள் மின் கட்டண யூனிட் 100க்கு கீழே இருந்தால் எந்த வித கட்டணமும் கட்ட தேவையில்லை.

எடுத்துக்காட்டு 2

உங்கள் மின் கட்டண யூனிட் 100 லிருந்து 200 க்குள் இருந்தால் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 1.5 கட்டணம் செலுத்த நேரிடும். மேலும் 101 - 200 யூனிட்க்குள் நாம் மின்சாரம் பயன்படுத்தி இருந்தால் Fixed டெபாசிட் ரூபாய் 30 செலுத்தி மற்றும் உபயோகித்த யூனிட்டிற்கும் பணம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக 120 யூனிட் உபயோகித்து இருந்தால் மின் கட்டணமாக 30 + 20 = 50 செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு 3

200 யூனிட்லிருந்து 500 வரையும் உபயோகித்து இருந்தால் 3 ரூபாய் ஒரு யூனிட்க்கு கட்டணம் செலுத்தணும். மேலும் Fixed டெபாசிட் ரூபாய் 30 செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு 4

500 யூனிட்டிக்கு மேலே உபயோகப்படுத்தப்பட்டால் ஒரு யூனிட்க்கு 6.60 ரூபாயும் Fixed டெபாசிட் 50 ரூபாயும் செலுத்த நேரிடும்.

குறிப்பு 

இந்த மின் கட்டண யூனிட் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்று கணக்கிடப்படுகிறது. பயனாளர்கள் நீங்கள் எத்தனை யூனிட் உபயோகப்படுத்துகிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல் உங்கள் மின் கட்டணம் பணம் கணக்கிட்டு கொள்ளுங்கள்.

மின் கட்டண கணக்கீடு

புதிய மின் இணைப்பு