விளையாட்டு துறை அமைச்சர் பெயர் 2024 ( vilayattu thurai amaichar name 2024 ) - தமிழ்நாட்டில் 40 க்கும் மேற்பட்ட துறைகள் ( அமைச்சரவை ) உள்ளன. பெரும்பாலும் அனைத்தும் மிகவும் முக்கிய துறைகளாக உள்ளன. அந்த வரிசையில் விளையாட்டு துறையும் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது.
இதையும் பார்க்க: தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர்
விளையாட்டு துறையோடு மட்டுமல்லாமல் இளைஞர் நலன் துறையும் சேர்ந்து வருகிறது. இதனால் இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே இத்தகைய திட்டங்கள் இருப்பதன் மூலம் அவர்களின் திறமை எளிமையாக வெளிப்படுகிறது. மேலும் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு இந்த துறை தற்போது வரை செயல்படுகிறது.
ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அனைத்து துறைகளுக்கும் திட்டங்கள், மானியங்கள் அறிவிப்பதுண்டு. அந்த வரிசையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு திறந்த வசதிகளோடு ரூபாய் 9, 000 லட்சம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி, மறு சீரமைப்பு என மேலும் 2, 500 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் பெயர் 2024 யார்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவில் தற்போது உள்ளவர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான்.
இதையும் பார்க்க: வீட்டு வரி கணக்கீடு