-->
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு புகார்

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு புகார்

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு புகார் ( Poramboke land rights in tamilnadu ) - சட்டங்கள் புதிதாக கொண்டு வந்தாலும் இந்த ஆக்கிரமிப்பு இன்னும் அதிகளவில் தான் உள்ளது. இதனை கண்டிப்பாக யாராலும் மறுக்க முடியாது. மொத்தம் இரண்டு ஆக்கிரமிப்புகள் உள்ளது. ஒன்று தனியார் நிலம் மற்றொன்று அரசு நிலமாகும்.

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு புகார்


அரசு புறம்போக்கு நிலத்தின் வகைகள் ஏகப்பட்டவை உள்ளது. அதில் நத்தம் பகுதி மட்டுமே மக்கள் வாழும் தகுதியான இடம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஆனாலும் மற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் மக்கள் முன் அனுமதி இன்று வீடுகளை கட்டிக்கொள்கின்றனர்.

இதையும் படிக்க: கிராம நில வரைபடம்

ஆட்சேபனையுள்ள இடங்களில் வீடுகளை அல்லது வேறு ஏதோ பயன்பாட்டிற்கு மக்கள் பயன்படுத்தினால் அந்த நிலம் கையகப்படுத்தப்படும்.

உங்கள் ஊரில் உங்களுக்கு தெரிந்த மக்கள் அப்படி அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து இருப்பின் நீங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று மனுவினை சமர்ப்பிக்கவும். அந்த மனுவினை படித்த பின்னர் அவர் வட்டாட்சியருக்கு தெரியப்படுத்துவார். வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இவர்களுக்கு ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றம் செய்ய முழு உரிமை உண்டு.

இதையும் படிக்க: நில வரைபடம் எடுப்பது எப்படி