வீரபாண்டி திருவிழா 2024

வீரபாண்டி திருவிழா 2024 ( theni veerapandi thiruvila 2024 date in tamil ) - தேனி மாவட்டத்தில் வீரபாண்டி என்னும் கிராமத்தில் அருள்மிகு கௌமாரியம்மன் எழுந்தருளியுள்ளார். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலை காண ஏராளமான பக்த கோடிகள் முக்கிய  நாட்களிலும் குறிப்பாக சித்திரை திருவிழா நாட்களிலும் வருகிறார்கள். தை மாத சங்கராந்தி, தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை விழா, ஆடி அமாவாசை, மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரி என பல்வேறு நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

வீரபாண்டி திருவிழா 2024


சித்திரை மாதம் தமிழ் வருட முதல் மாதமாகும். இதில் ஏகப்பட்ட திருவிழாக்கள் ஒவ்வொரு ஊர்களில் நடைபெறும். மதுரை சொக்கநாதர் கல்யாணம் இந்த சித்திரையில் மிகவும் பிரபலமானது. அதேபோல் இங்கும் மிகவும் வெகுவிமர்சியாக நடைபெறும்.

சித்திரை மாத இறுதி வார செவ்வாய் கிழமையிலும் வைகாசி முதல் வார செவ்வாய் கிழமை என எட்டு நாட்களில் இங்கு திருவிழாக்கள் நடைபெறும். இந்த எட்டு நாட்களும் நாம் 24 மணி நேரமும் அம்பாளை தரிசிக்கலாம். இதில் கம்பம் நடுதல், திருத்தேரோட்டம், வீதியுலா, ரதோற்சவம் மற்றும் மற்ற இதர பூஜைகள் நடைபெறும். பக்தகோடிகள் அலகு குத்துதல், ஆயிரம் கண் பானை மூலம் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள்.

சற்று முன்: வெள்ளியங்கிரி மலை அனுமதி 2023

மற்ற நாட்களில் நடைகளின் நேரம்

சாதாரண நாட்களில் காலை 05 மணி முதல் மதியம் 01 மணி வரையும் பிறகு மாலை 04 மணி முதல் இரவு 08 மணி வரையும் நடைகள் திறக்கப்பட்டிருக்கும்.

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா 2023 தேதி

சித்திரை 26 முதல் வைகாசி 02 வரையும் நடைபெறுகின்றன. அதாவது ஆங்கில மாதமான மே 09 இல் தொடங்கி மே 16 இல் முடிவடைகிறது.

சற்று முன்னர்: திருவாரூர் தேர் திருவிழா 2023 தேதி