திருவாரூர் தேர் திருவிழா 2023 தேதி ( thiruvarur ther date 2023 tamil )- ஆசியாவில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மிகப்பெரிய தேரோட்டங்களில் முதல் இடத்தினை இந்த திருவாரூர் தேர் திருவிழா இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை ஆழித்தேர் விருவிழா என்றும் நாம் சொல்லலாம். ஆழி என்றால் கடல் என்று அர்த்தம். அதாவது கடலினை போன்றது. இதன் உயரம் 91 அடி, அகலம் 31 அடி மற்றும் இதன் எடை 350 டன் கொண்டது. இவ்வளவு சிறப்புமிக்க அருள்மிகு தியாகராஜ சுவாமி தேரோட்டம் விழாவினை காண கோடிக்கணக்கில் வருடத்திற்கு ஒருமுறை வீதம் மக்கள் குவிகின்றனர்.
வரலாறு
1740 லிருந்து இந்த தேர் செய்யப்பட்டது எனவும் வரலாறு கூறுகிறது. 1930 ஆம் ஆண்டு மீண்டும் புதிதாக தேர் செய்யப்பட்டது. சில பல காரணங்களால் 1948 இல் மீண்டும் தேரோட்டம் நின்று போனது. பிறகு 1970 ஆம் ஆண்டு முதல் இன்று வரையும் ஒவ்வொரு ஆண்டு பங்குனியில் இந்த விழாவினை சிறப்பிக்க மக்கள் ஓடோடி வருகின்றனர்.
இதையும் படிக்க: திருவண்ணாமலை கிரிவலம் நேரம் 2023
முதலில் 10 சக்கரங்கள் இருந்ததை பிறகு நான்கு இரும்பு சக்கரங்கள் கொண்டு வடிவமைத்தனர். தேர் சரியான திசையில் செல்ல 500 முட்டுக்கட்டைகள் வீதம் இங்கு பயன்படுத்துகின்றனர். இந்த தேர் கிட்டத்தட்ட நான்கு மாட வீதியில் உலா வரும். ஒவ்வொரு ஆண்டில் வருகின்ற பங்குனியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் இந்த விழாவினை செய்ய ஏற்பாடு செய்வார்கள்.
திருவாரூர் ஆழித்தேர் தேர் திருவிழா 2023 தேதி
இந்த ஆண்டு பங்குனி 18 ( ஏப்ரல் 01 ) ஆம் நாள் சனிக்கிழமை அன்று ஆயில்யம் நட்சத்திரத்தில் திருவிழா நடைபெறுகிறது.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: வடலூர் ஜோதி தரிசனம் நேரம் 2023