வீடு கட்ட ஆகும் செலவு 2025

வீடு கட்ட ஆகும் செலவு 2025 - நம்மில் பலரும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை அதிகமாக இருக்கும். சிலருக்கு நல்லதாய் அமையும். ஒரு சிலருக்கு கடனாய் முடியும். இதனை தவிர்க்கவே ஒவ்வொரு முறையும் அலசி ஆராய மக்கள் விரும்புகின்றனர். தமிழகம் மற்றும் மத்திய அரசாங்கம் இணைந்து இலவச வீடு மற்றும் அதற்குண்டான அரசாணைகளையும் அவ்வப்போது வழங்கி வருகிறது. மேலும் ஒரு சதுர அடி முதல் இரண்டாயிரம் சதுர அடி வரையும் எவ்வளவு செலவாகிறது என்று தோராயமாக இங்கே காணலாம்.

வீடு கட்ட தேவையான பொருட்கள் 

1. கம்பிகள் கிலோ கணக்கு

2. சிமெண்ட் மூட்டை கணக்கு

3. செங்கல், தற்போது வீடு கட்ட சிறந்த கல் என அழைக்கப்படும் ஹோலோவ் பிளாக் 

4. எம் சேன்ட்

5. பி சேன்ட் 

6. 1/4 மற்றும் 3/4 ஜல்லி யூனிட் கணக்கு 

7. டைல்ஸ் 

8. பெயிண்ட் 

9. கதவுகள் 

10. ஜன்னல்கள் 

11. எலெக்ட்ரிக்கல் பொருட்கள் 

12. பிளம்பிங் 

13. லேபர் கூலிகள் அனைத்தும் சேர்த்து

14. பேஸ்மென்ட் கிராவல் யூனிட் கணக்கு

வீடு கட்ட அரசு மானியம் பெறுவது எப்படி

1000 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு 2025

1. முதலில் ஸ்டீல் ஐந்து டன் கண்டிப்பாக தேவைப்படும். இதற்கு அடுத்தபடியாக பார்த்தால் சிமெண்ட் 600 லிருந்து 700 மூட்டை வரையும் எம் சேன்ட் 20 யூனிட்டும் 5 யூனிட்டும் பேஸ்மென்ட் கிராவல் 15 யூனிட் வரையும் தேவைப்படுகிறது.

2. அடுத்தபடியாக முக்கால் ஜல்லி 13 யூனிட்டும் ஒன்றை ஜல்லி 5 யூனிட்டும் மற்றும் செங்கல் 20000 டு 23000 தேவைப்படுகிறது.

3. மேற்கூறிய பொருட்களை வாங்குவதற்கு சுமார் பத்து லட்சம் முதல் பதினைந்து லட்சம் வரையும் செலவாகலாம்.

4. இதை தவிர்த்து பெயிண்ட், கதவு, ஜன்னல், வாசப்படி, டைல்ஸ், மோட்டார் பம்ப், ஈபி லைன், கிச்சன் பொருட்களை வைப்பதற்கு ஏதுவான பொருட்கள் மற்றும் இதர செலவுகள் என்று பார்த்தால் தோரயமாக ஏழு லட்சம் வரையும் செலவாகலாம்.

5. ஒட்டுமொத்தமாக 1000 சதுர அடிக்கு தோராய கணக்கு 18 லட்சம் முதல் 21 லட்சம் வரையும் செலவாகலாம்.

குறிப்பு 

இந்த செலவுகள் எல்லாம் பிளான் யை பொறுத்து தான்.

600 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு 2025

15 லட்சம் தோராயமாக மற்றும் ஒரு வீடு கட்ட 1 சதுர அடிக்கு 2300 முதல் 2500 ரூபாய் செலவாகும்.

400 சதுர அடி கட்ட ஆகும் செலவு 2025

ஒரு சதுரத்திற்கு 1, 80, 000 முதல் 2, 00, 000 வரையும் ஆகலாம். மொத்தமாக நான்கு சதுரம் அதாவது நாநூறு சதுர அடிக்கு 7, 50, 000 முதல் 8, 50, 000 லட்சம் வரையும் செலவு இருக்கும்.

500 ஸ்கொயர் பீட் வீடு கட்ட ஆகும் செலவு 2025

மொத்தம் 12, 50, 000 முதல் 13, 00, 000 லட்சங்கள் வரையும் செலவாகலாம். காம்பொன்ட் சுவரையும் சேர்த்து இந்த விலை இருக்கலாம்.

பசுமை வீடு கட்ட ஆகும் செலவு