வளர்பிறை முகூர்த்த நாட்கள் 2025 ( valarpirai muhurtham dates 2025 January ) - கல்யாணம் வைப்பதற்கு ஏதுவாக அமைவது முதலில் நாட்கள் தான். அத்தகைய நாட்களை சரியாக தேர்ந்தெடுப்பது நம் கையில் தான் இருக்கிறது. பொதுவாக மக்கள் அதிகம் தேர்ந்து எடுக்கும் பிறையாக இந்த வளர்பிறை இருக்கிறது. அதற்க்காக தேய்பிறையில் கல்யாணம் செய்யக்கூடாது என்பது அர்த்தம் இல்லை. மாறாக தேய்பிறையை காட்டியிலும் வளர்பிறையில் கல்யாணம் செய்தால் நல்லது என்று நம் வீட்டு பெரியவர்கள், முன்னோர்கள் எல்லாம் கூறுவார்கள். தேய்பிறையில் செய்தால் தேய்ந்து கொண்டே போகும் என்பதனால் அதில் பெரும்பாலும் திருமணம் செய்வதில்லை. இருந்தபோதிலும் ஒரு சில ஜாதக அமைப்பின்படி தேய்பிறைகளிலும் திருமணம் நடத்துகிறார்கள்.
இந்த 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக கணக்கிட்டால் 29 வளர்பிறை முகூர்த்தங்கள் காணப்படுகிறது. அதில் மார்ச் மற்றும் ஜூலையில் தான் தலா ஐந்து வளர்பிறை நாட்கள் உள்ளன. மற்ற மாதங்களில் இரண்டு மூன்று வளர் பிறை தேதிகள் மட்டுமே இருக்கிறது.
மாங்கல்யம் வாங்க நல்ல நாள்
2025 திருமண முகூர்த்த நாட்கள் ( வளர்பிறைகள் மட்டும் )
1. ஜனவரி - இல்லை
2. பிப்ரவரி - 02, 03, 12
3. மார்ச் - 02, 05, 06, 07, 12
4. ஏப்ரல் - 30
5. மே - 01, 08, 09, 28
6. ஜூன் - 02, 04, 05, 08, 29, 30
7. ஜூலை - 02, 03, 04, 06, 07
8. ஆகஸ்ட் - இல்லை
9. செப்டம்பர் - இல்லை
10. அக்டோபர் - இல்லை
11. நவம்பர் - 02, 03, 08, 30
12. டிசம்பர் - 01.
குறிப்பு
இந்த தேதிகளில் கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்று உங்கள் ஜோதிடர்களை அணுகி கொள்ளுங்கள். இதில் அதிகமாக கல்யாணம் செய்வது என்று பார்த்தால் மே மாதம் தான். ஏனென்றால் கத்திரி தொடங்கி முடிவதற்குள் யாருமே கல்யாணம் செய்து கொள்ளமாட்டார்கள். அதனால் கத்திரி முடிந்து மே மாதங்களில் அதிகமாக மக்கள் கல்யாணம் செய்கிறார்கள்.
நிலம் வாங்க நல்ல நாள்