உயில் எழுதுவது எப்படி

உயில் எழுதுவது எப்படி - உயில் என்பது ஒருவர் தனது சொத்தை தானமாகவோ அல்லது விருப்பப்பட்டோ ஒருவருக்கு எழுத்து மூலம் சொல்லக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆவணம் ஆகும். இதனை சொத்து யார் பெயரில் இருக்கிறதோ அவர் தான் எழுத வேண்டும். உயில் எழுத கணினி மூலம் type செய்தாலும் சரி அல்லது பேப்பரில் எழுதினாலும் பரவாயில்லை. உதாரணமாக உயிலை கீழ் காணும் வழிகளில் நீங்களே எழுத முடியும். ஆனால் கீழே கொடுக்கும் உயில் மாதிரி தான் உயில் எழுதுவதற்கான வழிகள் இல்லை. மாறாக இது வெறும் எடுத்துக்காட்டு தான்.

உயில் எழுதுவது எப்படி


முதலில் உயில் சாசனம் என்று பெயர் குறிப்பிட்டு இருக்க வேண்டும். வலது பக்கத்தில் தேதியை குறிப்பிட வேண்டும். ஏனென்றால் தேதி மிகவும் முக்கியமானது உயிலிற்கு. பிறகு எழுதும் நபர் உயிலின் தந்தை, தாய் மற்றும் முகவரியை எழுத வேண்டும். எழுதிய பின்னர் சொத்தின் விவரம் மற்றும் அந்த சொத்து எப்படி வந்தது என்று சொல்ல வேண்டும். 

முக்கியமாக யாருக்கு சொத்து தர போகிறீர்கள் மற்றும் கொடுக்கும் காரணமும் அதில் கூற வேண்டும். நல்ல மனநிலையில் தான் இந்த உயிலை நான் எழுதுகிறேன் என்றும் சொல்ல வேண்டும். இந்த காரணங்கள் மற்றும் விவரங்கள் அனைத்தையும் இரண்டு அல்லது மூன்று பக்கத்திற்கு அந்த பேப்பரில் சொல்ல வேண்டும். எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதலாம். அது உங்கள் விருப்பம்.

இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் கொண்டு எழுதினால் மிகவும் நல்லது. பின்னாளில் எந்த வித பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக. சாதாரண பேப்பர் அல்லது கிரீன் ஷீட்டில் கூட உயிலை நீங்கள் எழுதலாம். பதிவு செய்வதும் பதிவு செய்யாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். பதிவு செய்தால் கண்டிப்பாக ஒரு துளி கூட பிரச்சனை இல்லாமல் யார் பெயரில் சொத்து இருக்கிறதோ அந்த பெயருக்கு சொத்து சேர்ந்து விடும். இதற்கு கட்டணமாக 1 சதவீதமாக சொத்தில் இருந்து வசூல் செய்யப்படுகிறது.

கூட்டு உயில்

உயில் என்றால் என்ன

Tnreginet