உயில் என்றால் என்ன

உயில் என்றால் என்ன - உயில் என்பது நமக்கு பிறகு யாருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும் என்பதை எழுத்து பூர்வமாகவும் மற்றும் தகுந்த சாட்சியுடன் எழுதி தருவது உயில் எனப்படும். மேலும் அதனை பாதுகாப்பாக வைக்க ஒரு நல்ல வக்கீலை நாடி தகுந்த முத்திரைத்தாளுடன் பதிவாளர் அலுவலகத்தில் சேமித்து வைப்பது இன்னொமொரு கடமையாகும். அத்தகைய உயிலை சமாளிப்பது தான் இன்றயை சூழ்நிலையில் இருக்கும் சவாலே என்று தான் கூற வேண்டும். ஒருவேளை உயில் எழுதவில்லை என்றால் அவர்களுக்கு மகன்கள் இருக்குமாயின் அவர்கள் பிரித்து கொள்ளலாம். குறிப்பாக பொதுவாக அனைவர்க்கும் சம பாகம் கொண்ட சொத்துக்களை பிரித்து கொள்ள வேண்டும்.

உயில் என்றால் என்ன


உயிலை கட்டாயமாக பதிவு செய்யுணுமா என்று கேட்டால் அது அவர்கள் விருப்பம். ஏனென்றால் சொத்தின் உரிமையாளரின் விருப்பமே இந்த உயில் எழுதுவது, எழுதாமல் இருப்பது அல்லது பதிவு செய்யாமல் இருப்பது. உதாரணமாக பதிவு செய்யாமல் ஒரு வெள்ளை தாளிலோ அல்லது 20, 50 மற்றும் 100 ரூபாய் பாண்ட் பத்திரத்திலோ எழுதினால் அது இவர்களுடையது அல்ல என்கிற பிரச்சனை ஏற்படும். அதும் இல்லாமல் உயிலை எழுத வேண்டுமென்றால் அது அவர் சம்பாதித்த சொத்துக்கள் இருந்தால் மட்டுமே எழுத முடியும். ஒருவேளை பூர்வீக சொத்துக்கள் இருந்தால் உயில் எழுதுவது வீண்.

உயில் எழுதுவது எப்படி

ஒருவேளை ஒருவரிடம் பத்திரம் மட்டுமே இருக்குமாயின் அவர்களுக்கு மொத்த சொத்தும் சேராது. மாறாக அனைவருக்கும் உரிமை மற்றும் சம பாகம் உண்டு. அப்படி இல்லையென்றால் அதில் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். நீதிமன்றமும் அதற்கு முக்கியத்துவம் தரும். இறுதியாக பாகப்பிரிவினை என்ற முறையில் தான் அந்த சொத்தானது செல்லும். இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம் சொத்தின் உரிமையாளர் அவர் விருப்படியே யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம். ஒருவருக்கு ஏற்றம் மற்றொவருக்கு இறக்கம் என்று அவர் விருப்பப்படியே சொத்துக்கள் எழுதலாம். அதில் எந்த வித மாற்று கருத்துக்கள் இல்லை. ஆனால் உயில் எழுதாமல் போனால் அவர் சுயமாக சேர்ந்து வைத்த சொத்துக்கள் அனைத்தும் சம பாகங்களாக வாரிசுகளுக்கு செல்லும்.

உயில் எழுத தேவையான ஆவணங்கள்