தேய்பிறையில் சுபகாரியங்கள் செய்யலாமா - சுபகாரியங்கள் என்றால் புதிதாக வீடு கட்டுவது, திருமணம் செய்வது போன்ற செயல்களே சுப காரியங்களாக கருதப்படுகின்றது. ஆனால் இந்த விசேஷங்களை நாம் தேய்ப்பிறையில் செய்யக்கூடாது என்று நமது முன்னோர்கள் சொல்லி கொண்டே தான் இருக்கின்றனர். அதன் விவரங்கள் பின்வரும் பத்தியில் காணலாம்.
ஒரு நிலவு புவியை சுற்றி வருகின்ற காலம் என்று பார்த்தால் 30 நாட்கள் மட்டுமே. இதில் முதல் 15 நாட்கள் வளர தொடங்கும். பிறகு தேய்ந்து போகும். வளர்ந்து வருகின்ற காலங்களை வளர்கின்ற பிறை என்றும் தேய்ந்து போகின்ற காலங்களை தேய்பிறை எனலாம்.
இதையும் படிக்க: ஆவணி மாதம் கிரகப்பிரவேசம் செய்யலாமா
அதனால் தான் தேய்பிறைகளில் எந்த ஒரு சுப காரியங்களையும் செய்யக்கூடாது என்று நமது முன்னோர்கள் நமக்கு சொல்லி கொள்வதுண்டு. தவிர்க்க முடியாத காரணங்களாலும் அல்லது நேரமின்மை இருந்தால் தேய்பிறையிலும் சுப விசேஷங்களும் செய்து கொள்ள முடியும். ஆனால் பிரம்ம முஹூர்த்தம் எனப்படும் காலங்களில் செய்து கொள்வது பலனை தரும்.
இதையும் படிக்க: நவமி அன்று செய்ய கூடாதவை