தாத்தா சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டா

தாத்தா சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டா - சொத்துக்கள் பிரச்சனை இன்றளவும் அதிகமாக தான் வந்து கொண்டு இருக்கிறது. இதனை சரிகட்டவே அரசாங்கம் பல்வேறு சட்டங்களை அவ்வப்போது இயற்றி வருகிறது. இவற்றுள் பேத்தி என்பவர்கள் இரண்டாம் தலைமுறையினர்கள் ஆவர். அதாவது தாத்தா மகன் பிள்ளை, பிள்ளை மகள் பேத்தி என இரண்டாம் தலைமுறையினருக்கு சொத்தில் பங்கு உண்டா அல்லது இல்லையா என்பது பற்றி பார்ப்போம். பொதுவாகவே தாத்தாவின் சொத்தில் பேத்திக்கு சொத்தில் உரிமையும்,  சொத்தில் உரிமையில்லாமையும் ஒரு சில காரணங்களால் எழக்கூடும்.

தாத்தா சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டா


1. எனது தாத்தா அவர்கள் எந்த வித வித உயிலும் தான செட்டில்மென்ட் ஏதும் செய்யவில்லை. இப்போது பேத்தி ஆகிய எனக்கு சொத்தில் உரிமை உள்ளதா?

இது பூர்வீக சொத்தின் அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் பேத்திக்கு சொத்தில் சம பங்கு உண்டு. அதாவது தாத்தாவின் மகனுக்கும் பேத்திக்கும் உரிமை உள்ளது.

இதையும் பார்க்க: சொத்துரிமை சட்டம் 1956

2. தாத்தா அவர்கள் உயிலில் பேத்தி பெயருக்கு எழுதி வைத்தார்கள். ஆனால் எனது அப்பா, அவர்களின் சகோதர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். இவற்றை எப்படி தடுப்பது?

நிச்சயம் பேத்தி அவர்களுக்கு மட்டுமே இந்த சொத்தில் முழு உரிமை உண்டு.

3. தாத்தா அவர்கள் அவருடைய மகன் அல்லது மகள் பெயருக்கு பாகப்பிரிவினை மூலம் சொத்துக்களை எழுதி கொடுத்திருக்கிறார். பேத்தி அவர்களுக்கு சொத்தில் உரிமை உண்டா?

நிச்சயம் இல்லை. தாத்தாவின் மகன் அல்லது மகள் பாகப்பிரிவினை மூலம் சொத்துக்களை எழுதி கொடுத்ததன் விளைவாக மகன் சுயமாக சம்பாதித்த சொத்து என்கிற கணக்கில் வருகின்ற காரணத்தால் பேத்திக்கு சொத்தில் உரிமை கோர முடியாது. எப்படி அப்பா தான் சுயமாக சேர்த்து வைத்த சொத்துக்களை உரிமை கொண்டாட முடியாதோ அதேபோல் தான் இதுவும்.

சதுர அடி கணக்கிடுவது எப்படி