சதுர அடி கணக்கிடுவது எப்படி

சதுர அடி கணக்கிடுவது எப்படி - பொதுவாகவே வீடு கட்டுவதற்கு முன்பும் பின்பும் சதுர அடி கணக்கு செய்வதை தெரிந்திருப்பது அவசியமாகும். ஒரு இடத்தில் எத்தனை சதுர அடி இருப்பதை பத்திரம் மற்றும் பட்டா மூலம் சம்மந்தப்பட்ட நபர் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அவற்றை நேரில் பார்த்து அளவீடு செய்வதென்பது சற்று கடினமே. இதனால் சிலர் நில வரைபடம் எடுத்து கொள்வர். ஒரு சிலர் நேரில் சென்று இடத்தை பார்வையிட்ட பின்னர் அளவுகளை எடுப்பர். உதாரணமாக உங்கள் நிலம் ஒன்று இருக்கிறது அது பட்டாவில் ஹெக் மற்றும் ஏர்ஸ் இல் இருக்கும். அதனை சென்டிற்கு கன்வெர்ட் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் நம்முடைய நிலத்தை அடி கணக்கிலே நம்மால் அளந்து கொள்ள முடியும். ஒரு அடி என்பது 30 சென்டி மீட்டர் மற்றும் 12 இன்ச் ஆகும். உங்கள் நிலத்தை இன்ச் டேப் மூலம் கணக்கிட்டு நீளம் மற்றும் அகலத்தை எளிமையாக குறித்து கொள்ளலாம்.

சதுர அடி கணக்கிடுவது எப்படி


எடுத்துக்காட்டு 1


மேலே உள்ள புகைப்படத்தில் நீளம் 10 அடியும் அகலம் 20 அடியும் இருப்பதை காணலாம். நீளமும் அகலமும் பெருக்கினால் 200 சதுர அடி.

நிலம் அளக்கும் முறை

எடுத்துக்காட்டு 2


மேலே குறிப்பிட்டுள்ள புகைப்படத்தில் நீளமும் சரி அகலமும் சரி வேறு வேறு அளவுகளே காணப்படுகின்றன. அதனால் நீளத்தில் உள்ள அடிகலான 30 மற்றும் 15 யை கூட்டினால் 45 வரும். அதனை இரண்டால் வகுத்தால் 22.5 நீளம் கிடைக்கும். மறுபுறம் அகலம் அதே போல் கணக்கிட்டால் 32.5 அகலம் கிடைக்கும். இப்போது நீளத்தையும் அகலத்தையும் பெருக்கினால் வரும் விடை தான் சரியான சதுர அடியாகும்.

நிலம் அளக்க கலெக்டரிடம் மனு

ஒரு சதுரம் என்பது நீளம் மற்றும் அகலம் இவைகளின் பரப்பளவை சதுரம் எனலாம். மேலே உள்ள இரண்டு புகைப்படத்தில் வரும் விடைகளை 100 ஆல் வகுத்தால் வரும் விடை தான் சதுரம் ஆகும். அதாவது ஒரு சதுரம் எத்தனை சதுர அடி என்றால் 100 சதுர அடியாகும்.


இதேபோல் 10 சதுரம் எத்தனை சதுர அடி என்றாலும் 1000 எனலாம். இரண்டிற்குமே ஒரே விதமான விடைகள் தான் என்பதை புரிந்து கொள்தல் அவசியமாகும்.