நிலம் அளக்க கலெக்டரிடம் மனு

நிலம் அளக்க கலெக்டரிடம் மனு - நிலம் அல்லது இடம் மனிதரின் வாழ்வாதாரமாக ஒன்றாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நிலத்தினை அளக்க என்ன செய்வது என்று திகைத்தறியாமல் மக்கள் அவதி படுகின்றனர். எதனால் நிலத்தை அளக்க வேண்டுமென்றால் கூட்டுப்பட்டாவில் ஒரு நபர் விலகியோ அல்லது விருப்பப்பட்டோ தனி பட்டாவிற்கு மாற்றும்போது இத்தகைய பிரச்சனைகள் ஏற்படும். மேலும் ஒரு சொத்தை விற்கும்போது அங்கு பாகப்பிரிவினை சொத்தாக மாறினால் அந்த இடத்தில் நிலம் பிரச்சனை ஏற்படும். இறுதியாக அக்கம் பக்கத்தினர் பத்திரம் காட்டி என்னுடைய நிலம் அல்லது இத்தனை சதுர அடி என்னுடையது என்று சொன்னால் அங்கும் நிலம் பிரச்சனை ஏற்படும்.

நிலம் அளக்க கலெக்டரிடம் மனு


மேலே கூறிய காரணங்கள் மட்டுமே நிலத்திற்கு பிரச்சனை வரும் என்பதிலை. மாறாக இந்த மூன்று காரணங்களும் அதிகமாக இப்போது நிலவி வருகிறது. முதலில் பட்டா மாற்றும்போது இத்தகைய பிரச்சனை ஆரம்பமாகிறது. ஏனென்றால் வேறு ஒரு பெயரில் சொத்தினை இருக்கும் அதனை சொத்து வாங்கும் நபர் கிரையம் செய்து அவர் பெயருக்கு மாற்றி விடுவார். ஆனால் சொத்தின் உரிமையாளர் ஒரு நில சர்வேயர் கொண்டு நிலத்தினை அந்த நேரத்தில் அளக்க சொல்வதில்லை. அப்படி செய்தால் உங்கள் காலி மனையை சுற்றி சர்வே கற்கள் அவர்கள் நடுவார்கள். அப்படி நடும்போது நமது நிலமும் பக்கத்தில் போக வாய்ப்பில்லை. அடுத்தவர் நிலமும் நம்மிடம் வர வாய்ப்பில்லை.

பட்டா சிட்டா

ஒருவேளை நீங்கள் பணம் கட்டி சர்வேயர் வரவில்லை அல்லது எந்த வித ரெஸ்பான்ஸ் இல்லை என்றால் வருவாய்த்துறை மற்றும் வட்டாச்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். அப்படி அளித்தும் எந்த வித ரெஸ்பான்ஸ் இல்லை என்றால் கலெக்டரிடம் மனுக்களை கொடுக்கலாம். சாதாரண வெள்ளை தாளில் உங்கள் பிரச்சனைகளை அதில் விவரித்து சொல்லலாம். வாரத்திற்கு இரண்டாம் நாளான திங்கள் கிழமைகளில் உங்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் தெரியப்படுத்துங்கள். நீங்கள் ஏற்கனவே அளித்த புகாரின் நகல்கள், லேண்ட் சர்வே எண், உட்பிரிவு எண் மற்றும் பட்டா எண் அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி மனுக்கள் Pdf

பொதுவாகவே மாவட்ட கலெக்டரிடமே மனுக்களை இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்தாலே உங்கள் மனுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அப்படியும் உங்களுக்கு திருப்தி ஆகவில்லை என்றால் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 5, 6 உட்பிரிவு 1 இன் கீழ் புகார்களை அளிக்கலாம். அப்படி கொடுக்கும்போது அந்த புகாரின் மனுவை ஒரு நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு அக்னாலெட்ஜ் எடுத்து வைக்கவும். இதற்கும் உங்களுக்கு திருப்தி இல்லையென்றாலும் தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 18 உட்பிரிவு 1 இன் கீழ் மேல் முறையீடு செய்யலாம்.